search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RamaDass"

    • இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    இந்நிலையில் இயக்குனர் சேரன் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை படத்தில் அவரது இளம் வயது நிகழ்வுகள், டாக்டராக பணி செய்து கொண்டே பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை அகற்றவும், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சேரன் கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக கதையை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    • ஊரன் அடிகள் எண்பதுக்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார்.
    • ஊரன் அடிகளாரின் மறைவு தமிழ் சமயம் மற்றும் சன்மார்க்க ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் உடல்நலக் குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

    22 வயதிலேயே சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவியதுடன் எண்பதுக்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். நூலாசிரியராக மட்டுமின்றி உரையாசிரியராகவும் சொற்பொழிவாளராகவும் நிலைத்த புகழை ஈட்டியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் ஊரன் அடிகள்.

    அன்னாரது மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வள்ளலாரின் புகழைப் பரப்புவதிலும், தமிழ்ச் சமயங்கள் குறித்து ஆராய்ச்சி செல்வதிலும் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தவத்திரு ஊரன் அடிகளார் வடலூரில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

    வள்ளலார் குறித்து 14 நூல்கள் உட்பட 16 நூல்களை எழுதிய அவர், 12 நூல்களை பதிப்பித்தார், சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்தார். எனக்கு நன்கு அறிமுகமானவர்.

    ஊரன் அடிகளாரின் மறைவு தமிழ் சமயம் மற்றும் சன்மார்க்க ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
    • விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாசு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

    நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்

    கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா மருத்துவர் இராமதாசு விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×