search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram beneficiaries scooter"

    உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 610 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். #AmmaTwoWheelerScheme

    ராமநாதபுரம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 610 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்களையும், 7 பயனாளிகளுக்கு வேளாண் எந்திரங்களையும் (டிராக்டர்), 2 பயனாளிகளுக்கு துணி தேய்ப்பு பெட்டிகள் என மொத்தம் 619 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் ஊரக பகுதிகளுக்கு 1,340 வாகனங்களும், நகர்புற பகுதிகளுக்கு 580 வாகனங்களும் என மொத்தம் 1,920 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை இரண்டு கட்டங்களாக 250 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகள், நகரப் பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கென்ஸி லீமா அமாலினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜா, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் காதர் சுல்தான், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உள்பட பலர் கலந்து கொண்டனர். #AmmaTwoWheelerScheme

    ×