search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramanathaswamy temple"

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
    • 22 தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக அமாவாசை நாட்களில் தர்பணம் செய்வது சிறப்புக்குரியதாகும்.

    அதன்படி இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை முதல் கார், பஸ், வேன் மூலம் வருகை தந்ததனர். அமாவாசை நாளான இன்று அதிகாலை திரளான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதன் பின் பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ராமேசுவரத்தில் தடுப்பு வேலியை திறந்துவிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தொடர் விடு முறை காரணமாக 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பக்தர் கள் வருகை தந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி பின் னர் ராமநாதசுவாமி கோவி லுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட ஒரே நேரத்தில் பக்தர்கள் குவிந்த னர்.

    இதனால் வடக்கு ராஜ கோபுரம் பகுதியில் எங்கு பார்த்தலும் பக்தர்களாக காணப்பட்டனர். கோவி லுக்கு உள்ளேயும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இருந் தனர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு வரிசை யாக நீராட அனுமதிக்கப் பட்ட னர்.

    இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் திடீரென தடுப்பு வேலியை திறந்து விட்டதால் பெரும் கூட்டமாக கோவிலுக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப ட்டது. இதனைத் தொட ர்ந்து, அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார். அங்கிருந்த இன்ஸ் பெக்டர் முருகேசன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.39 கோடி கிடைத்துள்ளது.
    • உண்டியல் எண்ணும் பணியில் ஆன்மீக பணியாளர்கள் ஈடுபட்டள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாதந்திர உண்டியல் வருவாய் எண்ணும் பணி நேற்று காலையில் அம்பாள் சன்னதி முன்புள்ள பழைய திருமண மண்டபத்தில் இணை ஆணையர் செ.சிவராம்குமார், உதவி ஆணையர் பா.பாஸ்கரன் தலைமையில் தொடங்கியது.

    இதில் உண்டியல் வருவாயாக ரூ. 1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து ரூ 935-ம், 216 கிராம் 200 மில்லி கிராம் தங்கம், 9 கிலோ 515 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வர் அ.பிரபாகரன், பேஸ்கார்கள் பஞ்சமூர்த்தி, கமலநாதன் மற்றும் உளவார ஆன்மீக பணியாளர்கள் என 150 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டள்ளனர்.

    • ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் செய்தனர்.
    • 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்றடைந்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 3 மணி முதல் ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின்னர் ராமநாதசுவாமி சன்னதியில் இருந்து மலர் அலங்காரத்துடன் மாணிக்கவாசகர் புறப்பாடானார். அப்போது திரளான பக்தர்கள் வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர். 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்ற டைந்தார்.

    அதனைத்தொடர்ந்து அங்குள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற து. காலை 4.15 மணி முதல் 5.15 மணிக்குள் ஆருத்ர தரிசன பூஜைகள் நடந்தன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராமநாதசாமி கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.
    • விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசாமி கோவிலில் இன்று முதல் முழு நேர அன்னதானத் திட்டம் தொடங்கியது.

    இதற்கான தொடக்க விழா கோவிலின் தெற்கு நந்தவன கலை அரங்கில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கோவிலின் முழுநேர அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    இதில் ராமேசுவரம் தாசில்தார் உமா மகேஸ்வரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன், ராமேசுவரம் கோவில் கூடுதல் ஆணையர் மாரியப்பன், சிவகங்கை மண்டல ஆணையர் பழனிக்குமார், ராமேசுவரம் நகர மன்ற தலைவர் நாசர்கான், நகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் ராமேசுவரம் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அன்று காலை கோவிலின் 3-ம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சைகளால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

    தொடர்ந்து 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாணிக்கவாசகர் தங்ககேடயத்தில் நடராஜர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி அன்று ஆருத்ராதரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்று அதிகாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு பால்,பன்னீர்,திரவியம்,மாபொடி,மஞ்சள் பொடி உள்ளிட்ட பல பொருட்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடை பெறுகிறது.தொடர்ந்து நடராஜர்-சிவகாமிஅம்பாளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமையில் உதவிகோட்டபொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் காரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கண்ணன், அண்ணாதுரை, கலைச்செல்வன், செல்லம், கமலநாத உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ஆருத்ரா திருவிழாவையொட்டி வருகிற 23-ந் தேதி அன்று கோவில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனமும் நடைபெற்று அதிகாலை 5.15 மணிக்கு நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடை பெறும் எனவும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×