search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "random"

    • மோகனூர் மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மோகனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.179 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடை, கழிவறை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளையும், ரூ.414.74 லட்சம் மதிப்பீட்டில் 6-வது வார்டில் வாரச்சந்தை கட்டும் பணிகளையும், ரூ.280 லட்சம் மதிப்பீட்டில் நவலடியான் கோவில் அருகே சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மோகனூர் பேரூராட்சி 10-வது வார்டு மற்றும் 15-வது வார்டில் மூல தள நிதியிலிருந்து ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டமைப்புடன் கூடிய காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோமதியிடம் அறிவுறுத்தினார்.

    முன்னதாக மோகனூர் ஊராட்சி ஒன்றியம் நெய்க்காரன்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.147 லட்சம் மதிப்பெட்டில் 1-வது வார்டு கந்தநகர் அருகில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது சேலம் ரெயில்வே கோட்ட உதவி மேலாளர் ராமச்சந்திரன், வட்டாட்சியர்கள் சுப்பிரமணியம், கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், கோமதி, திருநாவுக்கரசர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×