search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rathapuram"

    • ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் ராதாபுரம் தொகுதியியில் உள்ள 306 வாக்குசாவடி முகவர்களும் பங்குபெற்றனர். முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவியம், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரகாம்பெல் , நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நம்பி மற்றும் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
    • மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் பல நாட்கள் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

    இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    அதுமட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகள் மருத்துவர் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் பலர் ரத்த அழுத்த நோய்க்கும், நீரழிவு நோய்க்கும் சிகிச்சை எடுக்க வந்தவர்கள். இதனால் பலர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காலை 9.15 மணிக்கு மருத்துவர் வந்தார். அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதே போல் இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்காததால் இரவு நேரங்களில் வரக்கூடிய அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து ராதாபுரம் ஒன்றிய பா.ஜ.க. ஊடக தலைவர் காமராஜ் கூறியதாவது: -

    ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தான் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் மருத்துவர்கள் இருப்பதே கிடையாது. மருத்துவர்கள் உரிய நேரத்திற்கும், மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கும் வருவதும் கிடையாது.

    இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே பணிக்கு வராத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
    • குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றியம் மகாதேவன்குளம், குட்டம் மற்றும் ஆனைகுடி ஆகிய பகுதிகளில் பல்வேறு நிதிகளின் கீழ் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் பள்ளிகளுக்கு தேவையான கட்டிடம் ஆகியவற்றுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.

    குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    குறிப்பாக குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் யூனியன் தலைவர் இளையபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் புளோரன்ஸ் விமலா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், இசக்கிபாபு, ஜெஸி பொண்கலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், ராதிகா சரவணகுமார், வைகுண்டம் பொன் இசக்கி, பஞ்சவர்ணம் ஜெயகுமார், ஆனந்த், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பொன்மணி நடராஜன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×