search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration shop employees struggle"

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஊதிய உயர்வு கேட்டு ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    குள்ளனம்பட்டி:

    தமிழ்நாடு கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேசன் கடைகளில் விற்பனையாளர்களாக பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும், மேலும் நிரந்தரமாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 197 கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அதனை சார்ந்துள்ள 622 ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பொதுமக்கள் நகை, விவசாய கடன் வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மேலும் ரேசன் பொருட்கள் எடை சரியாக இருக்க வேண்டும், அரசு சார்பில் கொடுக்கப்பட வேண்டிய மானியங்களை உடனே கொடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×