search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery of encroached lands"

    • வருவாய்துறையினர் நடவடிக்கை
    • 1 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கேரட் சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஓடைபுறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி குந்தா தாலுகா இத்தலார் கிராமம், கல்லக்கொரை பகுதியில் ஓடைபுறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இங்கு மலைகாய்கறிகள் பயிரிட்டுள்ளதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி, கிராமநிர்வாக அலுவலர் சவுந்திரராஜன் கிராம உதவியாளர்கள் ராம்கி, கோகுல் உள்ளிட்ட வருவாய்துறையினர் கல்லக்கொரை பகுதிக்கு சென்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    அப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்ரமிப்பு களை முழுமையாக அகற்றி நிலத்தை மீட்டனர். தொடர்ந்து வருவாய் துறைக்கு சொந்தமான அவ்விடத்தில் அத்துமீறி யாரும் உள்ளே நுழையக்கூடாது எனவும், இதை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யும் வகையில் அறிவிப்பு பலகையை அமைத்தனர்.

    இதுவரை குந்தா தாலுகாகுட்பட்ட பல்வேறு இடங்களில் நீண்டகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான சுமார் 20 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

    இதேபோல் ஊட்டியை அடுத்த ஆடாசோலை என்ற இடத்தில் சுமாா் 1 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கேரட் சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது.

    ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி உத்தரவின்பேரில் வட்டாட்சியா் ராஜசேகரன் தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிா்வாக அலுவலா் ரசியா பேகம் ஆகியோா் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனா்.

    அத்துடன், இந்த இடம் நீா் நிலை புறம்போக்கு பகுதி, நீதிமன்ற உத்தரவுபடி மீட்கப்பட்டுள்ளது, இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், ஊட்டி ஆடாசோலை கிராமத்தில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கா் அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பாளா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    அவா்கள் அங்கு கேரட் சாகுபடி செய்திருந்ததால், தற்போது அறுவடை முடிந்ததும் நிலம் மீட்கப்பட்டது என்றனா்.

    ×