search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "registration of cases"

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • ஆனந்தசபேசன் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார்.
    • டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர்.

    கடலூர்:

    சிதம்பரத்தை சேர்ந்தவர் ஆனந்தசபேசன் (வயது 36) இவர் அதே பகுதியில் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார். இவர் சிதம்பரம், சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளான புவனகிரி, வீரப்பாளையம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய கடை மற்றும் பெரிய அளவிளான கடைகளுக்கும் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக இந்த பகுதிகளில் விற்பனை செய்யும் டீத்தூள் மாத விற்பனை குறைந்து வருகிறது.  

    இதனால் இந்த பகுதியில் விற்கும் டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர். இந்த ஆய்வில் போலியான டீத்தூள் என்பது உறுதியானது. இதனையடுத்து புவனகிரி ேபாலீசார் புவனகிரியில் டீத்தூள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களான கோவிந்தராஜன் (58), ராஜா (32), இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் எங்களுக்கு மொத்த விலைக்கு டீத்தூள் இங்கு கிடைக்கவில்லை அதனால் சிதம்பரத்திலுள்ள டீத்தூள் விற்பனை செய்யும் டீலர் ஆனந்தசபேசன் என்பவரிடம் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம் என்று கூறினர். 

    இதனால் போலீசார் சிதம்பர த்திற்கு விரைந்தனர். அங்கு போலீசார் டீலர் ஆனந்தசபேசனை பிடித்து விசாரணை செய்ததில் இந்த டீத்தூளை கரூரில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறேன் என்று கூறி யதி ன்பேரில் 3 பேரையும் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகு பதி, சேத்தி யா தோப்பு டி.எஸ்.பி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகி ன்றனர்.

    • ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்தனர்.
    • அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணி செய்து கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்தனர். இதனையடுத்து ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தாசில்தார் அலெக்சாண்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதியிலுள்ள மக்கள் காலக்கெடு கேட்டனர். இந்நிலையில் சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அருள்தாஸ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணி செய்து கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச் செல்வனிடம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி மிரட்டி, அவரை பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வளத்தி போலீசார் அருள்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூ.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டு. இவரது மகன் பாஸ்கர் (வயது 35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (45) என்பவருக்கும் கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்றுபாஸ்கர் தனதுஅண்ணன் சக்கரவர்த்தியுடன் சூ. பள்ளிப்பட்டியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது சிலர் தே.மு.தி.க. கொடி கம்பம் அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பாஸ்கர் ஏன் உடைக்கிறீர்கள்? என கேட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது.  இது குறித்து பாஸ்கர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதே போல் முருகன் என்பவர் கொடுத்துள்ள புகாரில் பாஸ்கர் மற்றும் இளங்கோவன் ஆகியோர் தி.மு.க. கொடி கம்பம் அமைந்துள்ள சிமெண்ட் கட்டையை இடித்து சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். இரு பிரிவினரும் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜதுரைக்கும், மாரிமுத்து என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.
    • சம்பவத்தன்றும இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து(51) என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக சம்பவத்தன்றும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, ராஜதுரை, பூபதி, மாரியம்மாள், ராஜா, ரவி, ராஜீவ்காந்தி, பாஸ்கர் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×