என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "regular sales hall by"
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மஞ்சள் வளாகத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் மற்றும் வில்லரசம்பட்டி ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்,
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது 15200 மெ.டன் அளவுள்ள 5 கிட்டங்கிகள், 2 பரிவர்த்தனைக்கூடங்கள், 1 சூரிய உலர்களம் மற்றும் 4 உலர்களங்களுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையான அளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகள் பார்வையி டப்பட்டது. யு.எம்.பி. மென்பொருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் முறை பார்வையிடப்பட்டது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் மறைமுக மஞ்சள் ஏலம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள 10000 மெ.டன் ஊறுர் கிட்டங்கியில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள மஞ்சள் மூட்டைகள் பார்வையிடப்பட்டது.
யு.எம்.பி. மென்பாருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பார்வையிடப்பட்டன.
மேலும் விற்பனைக்கூட வளாகத்தினுள் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைத்திட அறிவுறுத்தப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தினுள் உள்ள அக்மார்க் ஆய்வகம் பார்வையிடப்பட்டு அக்மார்க் தரச்சான்றிதழ் வழங்கிடும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டது.
பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை தொகை ரூ.4249 லட்சம் மதிப்புள்ள 5761 மெ.டன் மஞ்சள் விளைபெருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 2440 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மஞ்சள் வளாகத்தில் ஏலத்தி ற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.
மேலும் ஆல்பா சாப்ட்வோ மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பற்றி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடப்பட்டது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை ரூ.131.27 கோடி மதிப்புள்ள 20830மெ.டன் மஞ்சள் விளைபொருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 25,945 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது, செயலாளர், துணை இயக்குநர் ஈரோடு விற்பனைக்குழு சாவித்திரி, கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, சுரேஸ், மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்