search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relief assistance"

    • இடி தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
    • ரூ.4 லட்சத்திற்கான காசோ–லையை வருவாய் கோட்டா–ட்சியர் வழங்கினார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி கோகிலா (வயது 35). இவர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் இடி தாக்கி இறந்த கோகிலாவின் கணவர் மற்றும் குழந்தை–களிடம் அரசின் பேரிடர் கால குடும்ப நிவாரண உதவித்தொகை ரூபாய் 4 லட்சத்திற்கான காசோ–லையை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டா–ட்சியர் முருகேசன் வழங்கினார். நிகழ்வின் போது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வட்டாட்சியர் ராஜேஸ்வரி சங்கம் விடுதி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவாரண உதவிகளை பா.மு.முபாரக் வழங்கினார்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட இந்திரா நகர், எமரால்டு, தக்கர் பாபாநகர், லாரன்ட்ஸ் ஆகிய பகுதிகளை மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் பார்வையிட்டு, மழை சேதங்களை உடனே சரி செய்திட தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் அங்குள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணபொருட்களையும், வழங்கினார்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரசிவன், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
    • மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும், மரங்கள் விழுந்தும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி லவ்டேல் அருகே கெரடா சாலையில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்துள்ளது. ஊட்டி காந்தல் பகுதியில் வீடுகள் சேதம் அடைந்தது.

    இந்த பகுதிகளை நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

    பின்னர் லவ்டேல் ெரயில்வே பாலம், எல்கில் முருகன் கோவில் செல்லும் வழி, ராகவேந்திரா கோவில் முன்புறம் ஆகிய இடங்களில் மரம் விழுந்து மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு உள்ள பகுதிகளை பார்வையிட்டும், உடனே இவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்கிடவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    அப்போது அவருடன் மாவட்ட துணை செயலாளரும், ஊட்டி நகர மன்ற துணைத் தலைவருமான ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகராட்சி தலைவர் வானீஸ்வரி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, நகர துணை செயலாளர் ரீட்டா, மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, விஷ்ணு பிரபு, ரகுபதி, கஜேந்திரன், அபுதாகீர், தியாகு உட்பட கழக நிர்வாகிகள் மஞ்சனக்கொரை ஸ்டான்லி, வெங்கடேஷ், குரூஸ், ஆட்டோ பாபு, குமார், நடராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

    • கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

     ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மதியம் தொடங்கிய மழை தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை வரை பெய்தது.

    மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கூடலூா் முற்றிலுமாக இருளில் மூழ்கியது.

    கூடலூரை அடுத்துள்ள மொளப்பள்ளி, இருவல் பழங்குடி கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதால் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் வசிக்கும் 20 குடும்பங்களைச் சோ்ந்த 72 பேரை தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கவைத்துள்ளனா்.

    இந்தநிலையில், அமைச்சா் கா.ராமசந்திரன், முகாமில் தங்கவைக்கப்பட்ட பழங்குடி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். 

    • 2500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

     ஊட்டி:-

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

    இதனை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பந்தலூர் பேரிஸ் ஹால் மற்றும் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும் வைத்து 2500 மேற்பட்டவர்களுக்கு அரிசி, கம்பளி, சேலை, சுமார் வேட்டி, துண்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சமீப காலங்களில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் வழங்கியதுடன் யானை தாக்கியும், மழையால் வீடுகள் சேதமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார்.

    நடுவட்டம், கோழிபாலம் மங்குழி, தொரப்பள்ளி, தெப்பகாடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்,மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, இளங்கோ, ராஜூ, பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூர் பகுதி ஒன்றிய , நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன், சேகரன், சிவானந்த ராஜா, சுஜேஷ், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், பேரூர் செயலாளர்கள் சின்னவர், உதயகுமார், சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, சீனி, ராஜா, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ரா தேவி, வள்ளி, கலியமூர்த்தி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆலன், எல்கில் ரவி, நவ்புல், பிரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    ×