search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of encroaching shops"

    • மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
    • மருதமலை அடிவார பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது

    வடவள்ளி,

    கோவை மருதமலை அடிவாரத்தில் சாலை இரு புறங்களிலும் பொம்மைக் கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ேதவையான பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர்.

    இதேபோல் சாமி தரிசனம் முடித்து விட்டு வந்து, அடிவாரத்தில் உள்ள பொம்மை கடைகளில் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளையும் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் விழாக்காலங்களில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள்.

    இதனால் மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கடைகள் அனைத்தும் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து இருப்பதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    இதனால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அடிவாரத்தில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என கடைக்காரர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

    இன்று மருதமலை அடிவார பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. ெபாக்லைன் எந்திரம் மூலம் கடைகள் அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணியானது நொடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரதி, சாலை ஆய்வாளர் ஜாய் சுகன்யா மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் முன்னிலையில் நடந்தது.

    ×