search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of houses"

    • போலீசார் பாதுகாப்பு அளிக்க மனு
    • கலெக்டர், எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, தாசில்தார் நேரில் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் கோட்டை பின்புறம் உள்ள கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதிகளில் கால்வாய் சாலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் நிக்கல்சன் கால்வாயில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் ஆண்டுதோறும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    கன்சால் பேட்டையில் 46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கன்சால்ப்பேட்டை பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

    கடந்த மாதம் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோர் கன்சால் பேட்டையில் வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்குள்ள 46 குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் நாளை கன்சால்பேட்டையில் உள்ள 46 வீடுகளையும் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

    நாளை காலை 10 மணிக்கு கன்சால் பேட்டையில் உள்ள 46 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×