என் மலர்
நீங்கள் தேடியது "remove"
- நீலகண்டி ஊரணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.200 லட்சம் மதிப்பீ ட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.செம்மங்குண்டு ஊரணியில் ரூ.103 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நடைபாதை அமைப்பு உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகளும், முகவை ஊரணியில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, கைப்பிடி கம்பி, சுற்றுச் சுவர், தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், கல் இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க ப்படவுள்ளது.இதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
தொடர்ந்து நீலகண்டி ஊரணியை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றி கரையில் போதுமான மரக்கன்றுகள் நட்டு தூய்மையாக வைத்துக் கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதேபோல் பல்ேவறு அரசு வளர்ச்சி திட்ட பணி களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்
இந்த ஆய்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், நகர் மன்றத் தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரன், ராமநாதபுரம் வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், தமீம்ராஜா, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகரின் முக்கிய பகுதியில் மதுபான கடை அமைந்துள்ளது.
- 100-க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கபிஸ்தலம்:
வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகா யேஸ்வரர் கோவில் (குரு தலம்) உள்ளது.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நகரின் முக்கிய பகுதியில் மதுபான கடை அமைந்துள்ளது.
இந்த கடை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.
மேலும் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை கண்டித்து, உடன டியாக மதுக்கடையை அகற்றக்கோரி ஆலங்குடி ஊராட்சி தலைவர் வக்கீல் மோகன் தலைமையில், துணை தலைவர் ராசாத்தி சின்னப்பா மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ கதண்டுகள் அகற்றப்பட்டது
- விஷ கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்கள்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே நல்லிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது45).விவசாயி.இவரது தென்னந்தோப்பில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுத்தி வந்தது. இது குறித்து சுந்தரராஜன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் கோரிக்கை புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- சிறிய கார்கள் மற்றும் பெரிய கனரக வாகனங்கள் சிரமம் அடைகின்றன.
- அதனை அகற்ற சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் கிராமத்தில் உள்ள தெருக்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து வேகத்தடைகள் என்ற பெயரில் ஆபத்தை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வண்ணம் அமைத்து வரும் சுவர் போன்ற வேகத்தடைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வேகத்தடைகள் தார் சாலைக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களை பயன்படுத்தாமல் மாற்றாக சிமெண்ட் மற்றும் ஜல்லிகளை கொண்டு அமைக்கப்பட்டு வருவதால் அதில் ஏறி இறங்குவதற்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி சிறிய கார்கள் மற்றும் பெரிய கனரக வாகனங்களும் சிரமம் அடைகின்றன.
எனவே இதுபோன்று திடீர் திடீரென முளைத்து வரும் வேகத்தடைகளை அகற்றி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
- விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
எம்.எஸ்.எம்.இ. திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு பிரதமரிடமிருந்து முதல் பரிசு பெற்றமைக்கு கலெக்டருக்கு, மாவட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றிடும் திட்டத்தின் கீழ், விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த மணிமாறன், ஸ்ரீநாத் பிரகதீஸ்குமார் ஆகியோருக்கு அக்ரி கிளினிக் அமைக்க தலா ரூ.1லட்சம் மானியமாக வழங்கும் செயல்முறை ஆணையை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மரங்கள் நடுவதற்கு தகுதியான இடங்களை கண்டறிந்து வனத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சிதுறையின் மூலம் மரக்கன்றுகளை நட விவரம் சேகரிக்கப்பட உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் தற்போது பெரும் மாற்றம் செய்யப்பட்டு விவசாயிகளின் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் நில விபரங்களை பதிவு செய்து நல்ல முறையில் நடைபெற்று வருவதால் பதிவு செய்யாதவர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.
விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விவசாய கடன் அட்டை விரும்புவோர் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் விண்ணப்பித்து விவசாய கடன் அட்டை பெறலாம். சர்க்கரை ஆலை நிறுவனத்தினர் உறுதியளித்தவாறு கொள்முதல் கிரைய தொகையினை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் பள்ளிக்கூட ஆக்கிரமிப்பை அகற்றி நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகரில் குண்டூர்ணிக்கரை, கோட்டை முனியாண்டி கோவில், வாரச்சந்தை, செக்கடி ஊரணி கரை ஆகிய இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் 40 ஆண்டு பாரம்பரிய மிக்க மன்னர் துரைசிங்கம் மேல் நிலைப்பள்ளி பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடிங்களை அளவிடும் பணி மேற்கொண்டு அதன் பாதையை மீட்கவும் நகராட்சி தலைவர் சி. எம். துரை ஆனந்த் நேரில் சென்று நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சொந்தமான இடத்தை சர்வேயர் மூலம் அளந்து அளவீடு செய்தார். அப்போது நகராட்சி பொறியாளர் திலகவதி, துப்புரவு அலுவலர் மூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான் ராமதாஸ் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குடி பிரியர்கள் வந்து மது வாங்கி குடித்துவிட்டு கிராம பகுதிகளில் ஆங்காங்கே மது மயக்கத்தில் கிடப்பதும் அப்பகுதி வழியாக செல்லக்கூடிய பெண்கள் மாணவிகளை கிண்டல்-கேலி செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கபடவில்லை.
இதனால் அப்பகுதியில் இருந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கோபுராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்கப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் விரைந்து வந்த போலீசார் மண்எண்ணை கேனை பறிமுதல் செய்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். உயர் அதிகாரிகளிடம் சென்று மனு கொடுங்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ததீர் பாத்தீமா (18). தந்தை இவரை விட்டு பிரிந்து விட்டார். தாயுடன் சேர்ந்து வாழும் இவர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் ‘‘எனது தந்தை நான் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எனவே பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எனது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் அவரது பெயரை நீக்கி உத்தரவிட வேண்டும்.
குழந்தைகள் வேண்டாம் என கை கழுவிவிட்டு சென்ற பெற்றோரின் பெயரை குழந்தைகள் ஏன் சுமக்க வேண்டும்’’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிகார், நீதிபதிகள் உமர் அதாபண்டியால் இனாசுல் அக்சான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆவணங்கள் குறித்த விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதி கடைவீதிகளில் பல்வேறு இடங்களில் தனியார் ஜவுளி கடை உரிமையாளர்கள் மற்றும் திருமண விழா, கோவில் திருவிழா, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சிகளுக்காக பதாகைகள் வைத்து ரோட்டை அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றனர். மேலும் கடைவீதி, நான்கு ரோட்டில் நாலாபுறமும் குற்ற கண்காணிப்புக்காக போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களும் மறைக்கப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு மிகுந்த சிரமமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும் ஜெயங்கொண்டம் கடைவீதியில் சுமார் 10 மாதத்திற்கு முன்பு சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் ஒருவரிடம் இருந்து பணப்பையை மர்ம நபர் ஒருவர் திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அந்த மர்ம நபரை கண்டுபிடிப்பதற்காக, போலீசார் கேமராவில் பார்க்கும் போது பதாகைகள் மறைத்து விட்டது. இதனால் மர்ம நபர் யார் என்று இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மேலும் கடைவீதிகளில் ரோட்டு ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடை களால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டின் நடுவே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதுடன் சாலை ஓரங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தியும், பதாகைகளை அகற்றியும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.