search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repatriation"

    ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமிரா பொருத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ministersellurraju #rationshop

    மதுரை:

    மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமானில் ரூ.8 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். கலெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துவரிமானில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை வங்கி, கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் 32, 909 ரேசன் கடைகள் உள்ளன. இங்கு விலையில்லா அரிசியும், சிறப்பு வினியோக திட்டத்தின் கீழ் பாமாயில், துவரை வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் 25 இடங்களில் சிறு பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளன. ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் கைரேகை பதிவு செய்யப்படுகிறது.

    ரேசன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேசன் கடைகளில் முறைகேகடுகள் குறைந்துள்ளது. முழுமையாக முறைகேடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரேசன் கடைகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்ப பணியை தொடங்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதன்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எய்ம்ஸ்சை மதுரைக்கு கொண்டு வந்து சாதித்துள்ளார்.

    பாரதப்பிரதமர், தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தான் இந்த வெற்றியில் பங்கு உள்ளது. அமைச்சர்களும், தொண்டர்களும் எய்ம்ஸ் கொண்டு வந்தது குறித்து பெருமை கொள்ளலாம். இந்த வெற்றிக்கு எந்தவித தனி நபரும் உரிமை கொண்டாட முடியாது.

    எய்ம்ஸ் தொடர்பான நிகழ்ச்சியில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அ.தி.மு.க. கடல் போன்றது. இதில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை பார்த்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திறப்புவிழா நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, சோலைராஜா, கலைச்செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #rationshop

    ×