என் மலர்
நீங்கள் தேடியது "road accident"
- சாலை விபத்தில் 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
- உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நாக்லா கங்கர் பகுதியில் லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் ரீனா (வயது 22), அவரது ஒரு வயது மகன் அயன்ஷ், பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சந்த் லால் (வயது 70) ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்ற இருவரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது.
- இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனக்கொடி (52). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது தனக்கொடி கருங்கல்பாளையம் காவிரிக்கரை அருகே உள்ள சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்பிய போது பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், தனக்கொடி மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதின.
இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மாநில தலைநகருக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் என்ற இடத்திற்கு வருடாந்திர பள்ளி ஆய்வுச் சுற்றுலா சென்றனர். அப்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள மலை பிரதேச மாவட்டத்தின் லாங்சாய் பகுதிக்கு அருகில் உள்ள பழைய கச்சார் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மாநில தலைநகருக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் வீடியோ தொகுப்பை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் என். பிரேன் சிங், "பழைய கச்சார் சாலையில் இன்று பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க மீட்புக்குழு, மருத்துவக் குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பேருந்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்தில் காயம் அடைந்த 4 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்திற்கு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜீமா என்ற இடத்தில் வளைவில் திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயம் அடைந்த 4 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்கு உள்ளானது.
சாட்டன் என்ற பகுதியிலிருந்து 3 ராணுவ வாகனம், தாங்கு என்ற பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெமா என்ற பகுதியில் உள்ள வளைவு பாதையில் செல்லும்போது ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த வீரர்கள் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.
உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமடைந்தது.
- விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல் நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என புகார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியது.
பட்டினப்பாக்கம் சாலையில் சுற்றுலா வாகனம் ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவுமின்றி தப்பினார்.
விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல் நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ராதாகிருஷ்ணன் தாமாக முன்வந்து சரிசெய்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- காரில் பயணித்த ஒன்பது பேரில், சொகுசு பேருந்தின் ஓட்டுனருடன் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஒன்பது பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நவ்சாரி மாவட்டம் வெஸ்மா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வல்சாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் பேருந்து மீது மோதியதாக நவ்சாரி காவல் கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.
காரில் பயணித்த ஒன்பது பேரில், சொகுசு பேருந்தின் ஓட்டுனருடன் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பயணம் செய்தவர்கள் அங்கிலேஷ்வர் பகுதியில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும், பேருந்தில் பயணம் செய்தவர்கள் வல்சாத்தை சேர்ந்தவர்கள் என்றும் உபாத்யாய் கூறினார்.
சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரிஷப் பண்டின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது.
- லண்டனில் இருந்த ரிஷப் பண்டின் தாய் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் நேற்று காலை இந்தியா வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இதில் ரிஷப் பண்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் அடைந்து அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெற்றி காயத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. ரிஷப் பண்டின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று உறவினர்கள், குடும்ப நண்பர்கள் தெரிவித்தனர்.
ரிஷப் பண்டின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது. அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமா என்பதை மருத்துவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
லண்டனில் இருந்த ரிஷப் பண்டின் தாய் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் நேற்று காலை இந்தியா வந்தனர். அவர்கள் ரிஷப் பண்டுடன் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள் என்றனர்.
ரிஷப் பண்ட்டை டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இயக்குனர் ஷியாம் சர்மா சந்தித்தார். பின்னர் அவர் கூறும் போது, "ரிஷப் பண்ட் இங்குள்ள மருத்துவர்களால் நன்கு கவனிக்கப்பட்டு வருகிறார். அவர்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியமும் தொடர்பில் உள்ளது. தற்போது ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் மட்டுமே வைக்கப்படுவார்.
ரிஷப் பண்ட் காரில் சென்றபோது சாலையில் ஒரு பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிதார்" என்றார்.
- ரிஷப் பண்ட்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
- ரிஷப் பண்ட் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்றனர்.
டேராடூன்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரரான ரிஷப் பண்ட், தனது சொகுசு காரில் டெல்லியில் இருந்து உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு சென்ற போது விபத்தில் சிக்கினார்.
கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தலை, முதுகு, கால் ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணுக் காலில் ஜவ்வு கிழிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரிஷப் பண்ட்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ரிஷப் பண்டின் காயங்கள் முழுமையாக குணமடைந்து அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளது. அவரது காயங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் இந்திய அணியில் விளையாடுவதற்காக முழு உடல் தகுதியை பெற ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்றனர்.
மேலும் ரிஷப் பண்ட்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர் கூறும் போது, ரிஷப் பண்ட் உடல் ரீதியாக ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைப்பது முக்கியம். காயங்களால் அவர் இன்னும் வலியுடன் இருக்கிறார். அவரை பார்க்க வருபவர்களிடம் பேசுகிறார்.
இது விரைவாக குணமடைய வேண்டிய அவரது ஆற்றலை குறைக்கிறது. அவரை பார்க்க விரும்புபவர்கள் அதை தற்போது தவிர்க்க வேண்டும். ரிஷப் பண்ட் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்றனர்.
- ஸ்கூட்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தோழி இடது பக்கமாக சரிந்து விழுந்ததால் காயங்களுடன் தப்பி உள்ளார்.
- பணி முடிந்து அஞ்சலி ஸ்கூட்டியில் புறப்படும்போது அந்த தோழி ஸ்கூட்டியின் பின் இருக்கையில் ஏறுவது சி.சி.டி.வி. காட்சிகளில் தெரிய வந்தது.
டெல்லி, அமன்விகார் பகுதியை சேர்ந்த ரேகாவின் மூத்த மகள் அஞ்சலி. 23 வயதாகும் இவர் தந்தை இல்லாததால் தனது தாய் மற்றும் தன்னுடன் பிறந்த 4 சகோதரிகள், 2 சகோதரர்களை தனி நபராக இருந்து காப்பாற்றி வந்தார்.
இவரது தாய் ரேகா உடல் நல பாதிப்பால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சிகிச்சைக்காக கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் நேற்று முன்தினம் அவர் டெல்லி சுல்தான்புரி பகுதிக்கு பணிக்கு சென்றிருந்தார்.
பணி முடிந்து அதிகாலை 3 மணிக்கு அவர் தனது ஸ்கூட்டியில் திரும்பி வந்தபோது கார் மோதியது. இதில் முன்பக்க சக்கரத்துக்கு இடையே அவரது கால்கள் சிக்கி கொண்டதால் 13 கி.மீ. தூரத்துக்கு சாலையில் அவர் இழுத்துச்செல்லப்பட்டு பலியானார். டெல்லியில் இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
காவல் துறையை கண்டித்து ஆளும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் ஆகிய 5 வாலிபர்கள் கைது செய்யபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கைதான 5 வாலிபர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்துவதற்காக 5 வாலிபர்களின் ரத்தம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் தீபக், அமித் ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் லோகேஷ் என்பவருக்கு சொந்தமானதாகும். அவர் அசுதோஷ் என்பவருக்கு அந்த காரை விற்பனை செய்து உள்ளார். அவரிடம் இருந்து அமித் அந்த காரை புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வாங்கி வந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்படுத்தியபோது ஸ்கூட்டியில் இருந்த பெண் கீழே விழுந்து விட்டதாக நினைத்து காரை ஓட்டி வந்துள்ளனர். ஆனால் காருக்கு அடியில் பெண் சிக்கி இருப்பதாக சிலர் கூச்சலிட்டதும் காரை நிறுத்தி பார்த்ததாக 5 வாலிபர்களும் தெரிவித்து உள்ளனர். கார் முழுவதும் ரத்த கரையாக இருந்ததால் அங்கேயே காரை நிறுத்திவிட்டு தப்பியதாகவும் கூறி உள்ளனர்.
அவர்களை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே 13 கி.மீ. தூரம் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அஞ்சலி பணி முடிந்து தனியாக வரவில்லை. அவருடன் அவரது தோழி ஒருவரும் வந்தார் என்பது நேற்று இரவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அஞ்சலி ஸ்கூட்டியை ஓட்ட அவர் தோழி பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.
கார் மோதியபோது ஸ்கூட்டி நிலைதடுமாறிய நிலையில் அஞ்சலி சாலையில் விழுந்துள்ளார். இதனால் அவர் மீது கார் ஏறி இறங்கி உள்ளது.
அதே சமயத்தில் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தோழி இடது பக்கமாக சரிந்து விழுந்ததால் காயங்களுடன் தப்பி உள்ளார். தன் கண் எதிரே தோழி பலியானதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறியபடியே தப்பி ஓடிவிட்டார்.
நேற்று இரவு சி.சி.டி.வி. காட்சிகளை டெல்லி போலீசார் துல்லியமாக ஆய்வு செய்தபோது இது தெரிய வந்தது. பணி முடிந்து அஞ்சலி ஸ்கூட்டியில் புறப்படும்போது அந்த தோழி ஸ்கூட்டியின் பின் இருக்கையில் ஏறுவது சி.சி.டி.வி. காட்சிகளில் தெரிய வந்தது. அதிகாலை 2.30 மணிக்கு அவர்கள் வேகமாக ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகளும் கிடைத்துள்ளது.
அஞ்சலியின் தோழியை நேற்று மாலை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். அவரை தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர் காரில் வந்தவர்கள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டே வந்ததாகவும், அவர்களது கார் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் கூறி உள்ளார்.
அஞ்சலி தோழியிடம் டெல்லி போலீசார் இன்று கூடுதல் வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்ய உள்ளனர். இது இந்த வழக்கில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்றும் போராட்டம் நடத்தினார்கள். விபத்துக்கு காரணமான காரில் இருந்த 5 பேருக்கும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக இன்று டெல்லி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.