என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road block"

    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
    • தஞ்சை-திருச்சி சாலை பெரியார் சிலை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிலாங்கரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதை மாற்றி தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.

    பாதாள சாக்கடைப்பணிகளை தரமான முறையில் அனைத்து தெருக்களுக்கும் அமைத்து இரு புறமும் வடிகால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் அதிகமான பொது மக்கள் வல்லத்தில் தஞ்சை - – திருச்சி சாலை பெரியார் சிலை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவலறிந்த வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யா ணசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகி, வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தால் மட்டுமே சாலைமறியல் விலக்கி கொள்வோம் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொது மக்கள் மறியல் போராட்டம்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    குளித்தலை,

    குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் ஊராட்சி பகுதியான மகாதானபுரம் நான்காவது வார்டு பொதுமக்கள் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாகவும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டி பழைய ஜெயங்கொண்டம் முதல் கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் மேட்டு மகாதானபுரம் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை தொடர்ந்து பகுதி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த லாலாபேட்டை காவல் துறையினர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது, சாலை மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,கிராமப் பகுதியில் ஏற்பட்ட சாலை மறியல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • பனஞ்சாரி, சேவிவட்டம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்துள்ளனர்.
    • பொது மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சென்று துட்டம்பட்டி யில் இருந்து மாட்டை யாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம். துட்டம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு பனஞ்சாரி, சேவிவட்டம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்துள்ளனர். இத னால் அப்பகுதி பொது மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சென்று துட்டம்பட்டி யில் இருந்து மாட்டை யாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் துட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிதுரைசாமி, ஒன்றி யக்குழு துணைத்த லைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துரையன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அனைத்து வீடுளுக்கும் குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிந்து அனைவருக்கும் குடிநீர் முறையாக வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • சு.ஆடுதுறை ஊராட்சியில் கோவில் நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சு.ஆடுதுறை ஊராட்சியில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான பெரியாண்டவர் கோவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தபோது அதே ஊரை சேர்ந்த ஒருவர் 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த சமுதாய மக்கள் நிலத்தை சரியாக அளந்து கல்நடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ஆக்கிரமிப்புக்காரர் நிலத்தில் பயிரிட்டுள்ளதாக கூறப்படும் நபர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கக்கோரி அந்த சமுதாய மக்கள் திருமாந்துறை-அகரம்சீகூர் சாலையில் குருசாமி என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் பயிர் அறுவடை செய்த பின், ஒரு மாத கால அவகாசத்தில் நில அளவை செய்யபடும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஆலூத்துபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • தாராபுரம் மெயின் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்து பாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில், நீர்மட்டம் குறைந்தும், சில ஆழ்குழாய் கிணறுகள் நீர் வற்றிவிட்ட தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தினர் தண்ணீரை அனைத்து பகுதி களுக்கும் வழங்குவதற்காக, குறைந்த அளவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதுமான தண்ணீர் வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று பல்லடம் - தாராபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி விரைவில் போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இதனால் பல்லடம் - தாராபுரம் மெயின் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    • கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளி பாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • குடிநீர் பைப் உடைந்ததால் கடந்த சில நாட்களாக பெரியசோளிபாளயம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளி பாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது குடிநீர் பைப் உடைந்ததால் கடந்த சில நாட்களாக பெரியசோளிபாளயம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.

    பின்னர் குடிநீர் பைப் லைன் சரிசெய்யப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் சேறும் சகதியும் கலந்து குடிநீர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சுத்தமான குடிநீரை பெரியசோளிபாளயம் ஊராட்சி நிர்வாகம் வழங்கக்கோரி கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் குடத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் பெரியசோளிபாளயம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, திரா விட மாடல் என்பது காலா வதியான கொள்கை என கருத்து தெரிவித்திருந்தார்.
    • தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, திரா விட மாடல் என்பது காலா வதியான கொள்கை என கருத்து தெரிவித்திருந்தார்.

    இதற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில், காவல்துறை உதவி மையம் முன்பாக நேற்று மதியம் திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி படத்தை வைத்து செருப்பு மாலை அணி விக்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், உடனடியாக அந்தப் படத்தை அப்புறப்ப டுத்தினர். மேலும் இதுகு றித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, ஆளுநர் ரவியின் படம் அவமதிக்கப் பட்டது. குறித்து அறிந்து, சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சண்முகநாதன் தலைமை யில், வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நேற்று மாலை பா.ஜ.க.வினர் திரண்டனர்.

    ஆளுநர் படம் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த செயலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வா கியை கைது செய்ய வலியு றுத்தியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், ஆளுநர் படத்தை அவம திப்பு செய்த நபர் மீது நட வடிக்கை எடுப்பதாகக்கூறி பா.ஜ.க.வினரை சமாதானம் செய்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • மீண்டும் அந்த சாலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்

    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்து வதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.

    இதேபோல் காட்பாடி செல்லும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கிரீன் சர்க்கிள் அகலம் அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்க வேண்டும் மேலும் தோட்டப்பாளையம் சென்னை சில்க்ஸ் சர்வீஸ் ரோட்டில் இருந்து வருபவர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கு வசதியாக கிரீன் சர்க்கிள் ஒரு பகுதி உடைக்கப்பட்டு அதில் சாலை உருவாக்கப்பட்டது. அதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த முன் 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பாதையை போலீசார் தடுப்புகளை வைத்து அடைத்துள்ளனர்.

    கிரீன் சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மீண்டும் அந்த சாலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • அறந்தாங்கி அருகே சிறைக்கு சென்று வந்தவர் மன உளைச்சலில் தற்கொலை செய்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதில் பழனிச்சாமி மீது பி.சி.ஆர். வழக்கும், ரவிக்குமார் மீது அடிதடி வழக்கும் போடப்பட்டுள்ளது.

    பி.சி.ஆர். வழக்கு போடப்பட்ட பழனிச்சாமி அறந்தாங்கி காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 10 தினங்களாக சிறையிலிருந்தார். அவர் நேற்று ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இந்நிலையில் சிறைக்கு சென்று வந்த அவமானம் தாங்காமல் மன உளைச்சலுக்கு ஆளான பழனிச்சாமி நேற்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பழனிச்சாமியின் சாவிற்கு காரணமாவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகம் முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
    • திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரங்கநாதன்(வயது 42) ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில் இவர் மீது கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஆறுமுகம், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    இதனையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் மற்றும் முனிவாழையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் காவல் நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர்.
    • பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    கடலூர்:

    காட்டுமன்னா ர்கோவில் ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான டன் மணல் கனரக வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டு வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்களுக்கு மணலை விற்பதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பொது மக்களுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த மணல் கொட்டி விற்பனை செய்வதற்கு விளைநிலத்தை வீணடிப்பததையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து நேரடியாக மணலை அள்ளுவதற்கு வழிவகை செய்யாவிட்டால் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அகில இந்தியவிவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
    • இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன்(24). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இந்திராதேவி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கருவுற்றிருந்த இந்திராதேவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நேற்று மாலை அவருக்கு சிசேரியன் மூலம் ஆண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு இந்திராதேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இரவு தனது மகளை பார்ப்பதற்காக இந்திராதேவியின் தாய் சென்றுள்ளார். தனது மகளின் உடலை தொட்டு பார்த்தபோது ஐஸ்கட்டி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இன்றுகாலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசவத்தின்போதே தவறான சிகிச்சையால் இந்திராதேவி இறந்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் இதுபற்றி தெரிவிக்காமல் டாக்டர்கள் மறைத்துவிட்டனர் எனக்கூறி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். இதனிடையே இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கேயும் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டமான சூழல் உருவானது.

    ×