search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road safety awareness rally"

    கூடலூரில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி, நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    கூடலூர்:

    கூடலூரில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி, நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணிக்கு சமூக ஆர்வலர் மோகன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம், சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்க தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூடலூர் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் காசி விசுவநாதன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணி ஊட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக ஐந்துமுனை சந்திப்பை அடைந்தது.

    பின்னர் அங்கிருந்து ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகம் வழியாக கோழிக்கோடு சாலையை வந்தடைந்தது. பேரணியில் தலைக்கவசம் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானவர்கள் சென்றனர். தொடர்ந்து துப்புக்குட்டிபேட்டை, செம்பாலா, நந்தட்டி, கோழிப்பாலம் வழியாக அரசு கலைக்கல்லூரியை பேரணி அடைந்தது.

    பேரணியில் கல்லூரி கண்காணிப்பாளர் ஜார்ஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கர், போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியன் உள்பட போலீசார், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்போம். விபத்துகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
    எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடி காவேரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கிளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    காரைக்குடி:

    எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடி காவேரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கிளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் அஜய் ஜோசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து காவேரி மருத்துவமனை வரை சுமார் 4 கி.மீ. சாலை வழியாக நடந்தது.

    வழி நெடுகிலும் சாலை விழிப்புணர்வு குறித்த கோ‌ஷங்களை எழுப்பிக் கொண்டும் கைகளில் விழிப்புணர்வு பலகைகளை ஏந்தியும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் சலீம், மருத்துவ இயக்குநர்கள் ராதா, காமாட்சி சந்திரன், டாக்டர். சரவணன், இந்திய மருத்துவ கழகத்தின் மாநில செயலாளர் ஸ்ரீதர், காரைக்குடி காவேரி கிளை தலைவர் செய்யது அன்சாரி, செயலாளர் உதயகுமார், பொருளாளர் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×