search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Stike"

    மத்தூர் அருகே அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்துள்ளது என்ற வதந்தியை நம்பி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Pongal
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் மேல் விதி கிருஷ்ணகிரி சாலையில் கூட்டுறவு ரேசன் கடை அமைந்துள்ளது. இந்த ரேசன் கடை மூலம் 860 குடும்பதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தொடங்கி வைத்து நேற்று 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கு (நாளை)இன்று வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் ரேசன் கடையின் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் நின்றனர். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்துள்ளது என்று வதந்தியை நம்பி பொதுமக்கள் கிருஷ்ணகிரி-பெங்களூர் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அறிந்த கூட்டுறவு சங்க தலைவர் சக்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் பொதுமக்களுக்கு ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. #Pongal
    ×