என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "road strike"
- அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
அவனியாபுரம்
அவனியாபுரம் பகுதியில் உள்ள ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்க மாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் இப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் இப்பகுதி மக்கள் உதவி பொறியாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் 3 நாட்க ளாக மழைநீருடன் கலந்த சாக்கடை நீர் வெளியேறா மல் துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக் கோரியும் இப்பகுதி மக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் நேரில் வந்து மக்களின் கோரிக்கை களை உடனே நிறைவேற்று வதாகவும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் மழை நீரை வடிகால் வாய்க்காலில் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை தேக்கத்தை அகற்றுகிறோம் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட பல பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அடிக்கடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆத்தூர் ஊராட்சி 7, 8 மற்றும் 17-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இன்று ஒரே நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 இடங்களில் ஒரே நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது.
சம்பவ இடத்துக்கு செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். ஆனால் பி.டிஓ.வந்தால் தான் நாங்கள் மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.
வருவாய் ஆய்வாளர் பிரவீனா வந்து பொதுமக்களிடம் பேசினார். மறியல் நடந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாசில்தாரோ மற்ற அதிகாரிகளோ யாரும் வராததால் மக்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர்.
ஊராட்சி செயலாளர் மனவாளனிடம் கேட்ட போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு இது குறித்து எடுத்து கூறி உள்ளோம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றார்.
போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக சொல்லி போலீசார் எச்சரித்தும் அவர்கள் நகரவில்லை. இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொதுமக்கள் முடிந்தால் எங்களை கைது செய்யுங்கள் என தெரிவித்தனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மழையின்றி ஆத்தூர் காமராஜர் அணை வறண்டு வருவதால் காவிரி கூட்டு குடிநீர் தண்ணீரை மட்டும் நம்பி உள்ள நிலை உள்ளது.
அதிலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 13 மற்றும் 14-வது வார்டு பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. இதனால் காலி குடங்களுடன் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை இப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் குடிநீர் பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து கொண்டே வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் திடீரென காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சாலையை மறித்து நீண்ட வரிசையில் குடங்களை அடுக்கி வைத்து நின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் யாரிடம் குறையை தெரிவிப்பது என தெரியவில்லை.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மாநகராட்சி பகுதியில் வாழ்வதற்கே உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த நகர் வடக்கு போலீசார் அவர்களை சமரசப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனுப்பி வைத்தனர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் தட்டியங்காமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. விழாவின் நிறைவு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
இதனை பார்ப்பதற்காக அதேபகுதி பூணாம்பாளையத்தை சேர்ந்த தனசேகர் (37), சிறுமி இந்துமதி (15) உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அப்போது ராசாம்பாளையத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலில் தனசேகர் உள்ளிட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து வந்த அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனாலும் போலீசார் புகாரினை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 4 நாட்கள் கடந்த நிலையில் இன்றும் வழக்கு பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த பூணாம்பாளைத்தை சேர்ந்த பொதுமக்கள் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், உயர் அதிகாரிகள் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என கூறினர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று மண்ணச்சநல்லூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. #tamilnews
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள 9 ரேசன் கடைகளில் கடந்த 8-ந்தேதி முதல் தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் சர்க்கரை, பச்சரிசி, கரும்புதுண்டு ஆகியவை வழங்கப்பட்டன. அதேபோல் சீர்காழி ரெயில்வே சாலையில் உள்ள கோயில்பத்து கிளை ரேசன் கடையிலும் மொத்தமுள்ள 1103 குடும்ப அட்டைதாரர்களில் 300அட்டைதாரர்களுக்கு பட்டுவாடா செய்து வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நேற்று காலை 7.30 மணி முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் பெற ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கடையில் பொங்கல் பரிசுப்பொருட்களான பச்சரிசி, சர்க்கரை, கரும்புகள் மட்டுமே இருப்பு இருந்தன.கார்டுதாரர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.1000 பணம் கூட்டுறவு துறையிலிருந்து வழங்கப்படவில்லை. பணம் வந்துவிடும் என பொதுமக்கள் சாப்பிட கூட செல்லாமல் பல மணிநேரம் வரை காத்திருந்தனர். மதியம் 4மணிக்கு பிறகு பணம் வரவில்லை என தெரிந்து பணம் இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைத்துவிட்டு ரேசன்கடை விற்பனையாளர் கடையை மூடி சென்றார். இதனால் பல மணிநேரம் வெயிலில் காத்துகிடந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து சீர்காழி-பணங்காட்டாங்குடி பிரதான சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன்,தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பயனாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்திட பணம் எடுத்துக்கொண்டு வருவாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.பின்னர் மாலை 6 மணிக்கு மேல் ரேசன் கடைக்கு பணம்வந்ததையடுத்து கார்டுதாரர்களுக்கு தொடர்ந்து பொங்கல் பரிசு பொருட்கள்,ரூஆயிரம் வழங்கப்பட்டது. #Pongal
கோவையில் பொங்கல் பரிசு பெற அதிகாலையிலே பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் பொங்கல் பரிசுடன் ரூ. ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம் ரொக்கபரிசு வழங்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு,ரூ. ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது.
இதனை வாங்க பொதுமக்கள் அலைமோதி வருகிறார்கள். கோவை சிங்காநல்லூரில் நேற்று பொங்கல் பரிசு வாங்க வந்த 2 மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர்.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் ரூ ஆயிரம் ரொக்கப்பணம் வாங்க இன்று அதிகாலை 2 மணிக்கே பொதுமக்கள் குவிந்தனர்.
அவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் கஞ்சப்பள்ளி கிராமத்தில் 575 ரேஷன் கார்டுகள் உள்ளது. அதில் 125 கார்டுகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பொங்கல் பரிசு தொகை தீர்ந்து விட்டதாக அதிகார்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
அவர்கள் திருப்பூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கஞ்சப்பள்ளி பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு மொத்தம் ரூ. 14.45 லட்சம் வழங்க வேண்டும். ஆனால் தலைமை அலுவலகத்தில் இருந்து ரூ. 7.26 லட்சம் மட்டுமே வந்துள்ளது.
இது தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் மலை மாவட்டமாக ஊட்டியிலும் உறைபனியையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலை நேரத்திலேயே ரேசன் கடைகள் முன்பு திரண்டு இருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலும் தொழிலாளர்கள் நிறைந்து காணப்படும் இந்த மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் முன்பு பொங்கல் பரிசு பெற வேண்டும் என்பதால் காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்புக்கு நிற்கும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். #tamilnews
பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க முடியாது, பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற விதிகளை பின்பற்றி பட்டாசு தயாரிக்க வழியில்லை என்பதால் பட்டாசு ஆலைகளை காலவரையன்றி மூடுவதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை மாற்ற வேண்டியும், மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சேத்தூர், கீழராஜகுலராமன், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆமத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வச்சக்காரப்பட்டி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.
இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி. யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். இவர்கள் 6 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சார்பில் சிவகாசி, மாரநேரி, திருத்தங்கல், தாயில்பட்டி, கன்னிசேரி உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். #tamilnews
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அருள்குமார் (வயது30).
அப்பகுதியில் மணல் கொள்ளை, சாராயம் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் சப்- இன்ஸ்பெக்டர் அருள்குமார், திறம்பட செயல்பட்டு வந்தார். இதனால் பொதுமக்களிடம் இவருக்கு தனி மரியாதை இருந்து வந்தது.
இந்தநிலையில் திடீரென இவர் பேராவூரணிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பணிமாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை பல்வேறு இடங்களில் ஒட்டினர்.
இந்தநிலையில் நேற்று கும்பகோணம்-காரைக்கால் சாலையில் அந்தமங்கலம் என்ற இடத்தில் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்வதற்காக பொதுமக்கள் ஒன்று கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேர்மையாக பணியாற்றும் சப்- இன்ஸ்பெக்டர் அருள்குமாரை மீண்டும் திருநீலக்குடியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், சில தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என கூறினர். இதை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
டெல்டா மாவட்டங்களில் கஜாபுயல் தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 13 நாட்களை கடந்தும் மக்கள் மின்சார வசதி இன்றி தவிக்கின்றனர். பல கிராமங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வாகன போக்குவரத்துள்ள இடங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை பெற்று செல்கின்றனர். தற்போது வீசிவரும் குளிர் காற்று மற்றும் பனியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புயல் தாக்கி பல நாட்களாகியும் தங்களது பகுதிக்கு அதிகாரிகள் வந்து சேதங்களை கணக்கெடுக்காததாலும், உணவு, குடிநீர் வசதி செய்யாததாலும் தினமும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் வழியில் விழுந்து கிடக்கின்றன. ஆனால் நிவாரண பணிகளை மேற்கொள்ள போதிய நடவடிக்கை எடுக்கபடவில்லை.
இதனை கண்டித்து ஒரத்தநாட்டை அடுத்த தெக்கூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல் ஒரத்தநாடு அருகே உள்ள செம்மண் கோட்டை கிராமத்திலும் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் மீட்பு பணிகள் நடைபெறதாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் மீட்பு பணி நடைபெற ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதே போல பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை, வடசேரி ரோடு, பொன்னவராயன் கோட்டை ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு மின் இணைப்பு வழங்க வேண்டும். குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாசில்தார் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண பொருட்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Gajacyclone
குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் இருப்பதாகவும், அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை வலியுறுத்தி இன்று காலை களியக்காவிளையை அடுத்த கோழிவிளை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோழிவிளை- மங்காடு சாலை, கணபதியான்கடவு- பொன்னப்பர் நகர் சாலை, கோளஞ்சேரி- நடைகாவு சாலை குறுகியதாக உள்ளது. இதனை விரிவுபடுத்த வேண்டும். பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து கொண்டார்.
இவர்களுடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ஸ்டுவர்ட் உள்பட ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
காங்கிரசாரின் திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. #Congress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்