என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "roadside traders"
- சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் குறித்த விபரங்களை புதிதாக கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
- அவர்கள் சிரமம் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க அரசால் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதி யில் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் குறித்த விபரங்களை புதிதாக கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
சாலையோர வியாபாரிகள்
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டத்தின் கீழ் தகுதியான சாலையோர வியாபாரி களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட புதிய கணக் கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அவர்கள் சிரமம் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க அரசால் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பகுதியில் நாளை மறுநாள் (திங்கட் கிழமை) முதல் மார்ச் மாதம் இறுதி வரையிலும் கணக் கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
ஆவணங்கள்
எனவே கணக்கெடுப்பு பணியாளர்கள் கேட்கும் விபரங்கள், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற ஆவணங்களை பணி செய்ய வரும் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுடன் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். குமார் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
சோழிங்கநல்லூர் முதல் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோட்டில் நடைபாதையில், மாற்று திறனாளிகள், விதவைகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், வியாபாரிகளுக்கு மாநகராட்சி அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்மஞ்சேரி போலீசாரின் உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், தனிநபர் ஒருவரும் சேர்ந்து கடைகளை புல்டோசர் மூலம் அடித்து உடைத்துள்ளனர்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாற்றுதிறனாளிகள் கடை வைப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்