என் மலர்
நீங்கள் தேடியது "robber"
- பலசரக்கு வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் தெருவில் உள்ள பாரதி தாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது50). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கணேஷ்பாபு கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்றுவிட மகனும் வெளியே சென்று விட்டார். வீட்டில் வயதான மூதாட்டி ஒருவர் தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார். வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்படாமல் சாத்தப் பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட மர்ம நபர் வீட்டுக்குள் நைசாக புகுந்து பீரோ சாவியை எடுத்து அதனை திறந்துள்ளார். பின்னர் அதில் இருந்த 32 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி பீரோ கதவு திறக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.
மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.
இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.
சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.
மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.
வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
- ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
- இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு வழக்கு மற்றும் வழிப்பறி நடைபெற்று வந்தது.
- மணியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் குண்டர் சட்டத்தில் கைதானார்.
விழுப்புரம்:
செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு வழக்கு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட செஞ்சி அருகே மணியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 29) குண்டர் சட்டத்தில் கைதானார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா .பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர்மோகன் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
- பெண்- வாலிபரை வாளால் வெட்டி வழிப்பறி செய்த 4 பேரை கைது செய்தனர்.
- இதையடுத்து கரந்தம்மாள் தலையில் வாளால் அவரை வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி கரந்தம்மாள் (வயது 52). பால் வியாபாரியான இவர், நேற்று முன் தினம் மாலை வியாபாரம் முடிந்து சிவகாமிபுரம்-பெரியகாடு பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் நீண்ட வாளை எடுத்து காட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தன்னிடம் பணமில்லை என்று கரந்தம்மாள் கூறினார்.இதையடுத்து கரந்தம்மாள் தலையில் வாளால் அவரை வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
அப்போது அங்கு நடந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம்குமார் என்பவரையும் அந்த கும்பல் வாளால் வெட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் கரந்தம்மாளுக்கு தலையில் 6 இடங்கள், விக்ரம் குமாருக்கு தலையில் 8 இடங்களில் வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக கீழக்கரை போலீசில் கரந்தம்மாள் புகார் அளித்தார். டி,எஸ்.பி, சுபாஷ் அறிவுறுத்தல்படி கீழக்கரை நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை புது கிழக்கு தெரு சீனி முஹமது மகன் (எ) முஹமது (30) , தட்டான்தோப்பு குணசேகரன் விஜய் (22), பிச்சை மகன் சஞ்சை நாதன் (20) , கிழக்கு நாடார் தெரு சங்கர் காந்தி மகன் அருண் (21) ஆகியோர் வாளால் வெட்டி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேைரயும் போலீசார் கைது செய்தது.
- காரணம்பேட்டையில் இருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
- போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையை சேர்ந்த கோபால் மனைவி பிரிசில்லா, (வயது 35) இவர் பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம் என்ற இடத்தில் மருந்துக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி காரணம்பேட்டையில் இருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
ஆறாக்குளம் என்ற இடம் அருகே செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிசில்லா தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்தது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து துப்பு துலக்கினர். அப்போது இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம், மதுக்கரை, சரஸ்வதி நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பிரசன்ன ராஜ்( வயது, 21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான கோவை மாவட்டம், மதுக்கரை, சரஸ்வதி நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் மோகன சூர்யா ( வயது 20 ) என்பவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை புதூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நகை-பணத்தை திருடிய வீட்டில் மதுபோதையில் தூங்கிய கொள்ளையனை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
- போலீசார் கைது செய்து அவர் திருடிய நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல், லோடுமேன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டு நேற்று அவனியாபுரம் வந்தார். அவர் தனது வீட்டின் கதவை பூட்டாமல் வெளியில் சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ரத்தினவேல் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரது வீட்டில் நிர்வாணமாக தூங்கிக் கொண்டிருந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது.
திருடப்பட்ட நகை, பணம் மற்றும் சில பொருட்கள் தூங்கிக் கொண்டிருந்த திருடனின் அருகே கிடந்தது. இதைப்பார்த்த ரத்தினவேல் வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம், பக்கத்தினரை அழைத்தார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று நிர்வாண நிலையில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பினர்.
மது போதையில் இருந்த அந்த வாலிபர் விழித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
உடனடியாக அவரை பிடித்துக்கொண்ட பொதுமக்கள் இதுபற்றி அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் நடராஜன் என்பதும், அவர் திருடிய 7 பவுன் நகை மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கத்துடன் மது போதையில் வீட்டில் தூங்கியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவர் திருடிய நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஈரோட்டில் போலீசார் வாகன சோதனையில் மோட்டார்சைக்கிள் கொள்ளையன் சிக்கினார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரை நிறுத்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
போலீஸ் விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன் (27) என்பதும் அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திருடி கொண்டு வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு முனிசிபல் காலனியில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடியது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போது தான் முருகன் போலீசார் வாகன சோதனையில் சிக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம் (34). இவர் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தான்.
எனவே இவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதைஅறிந்த அவன் திருப்பூரில் பதுங்கி இருந்தான். கடந்த 1-ந்தேதி மடிப்பாக்கம் டான்சி நகரில் கொள்ளையடிக்க வந்த அவன் அங்கு சுற்றித் திரிந்தான்.
அப்போது அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓட முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் விசாரித்த போது கொள்ளையடித்த நகைகளை கோவையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதாக தெரிவித்தான். உடனே அங்கு சென்ற போலீசார் 87 பவுன் நகைகளை மீட்டனர்.
மேலும் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு லேப்- டாப், காமிரா, செல்போன் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் சென்று தான் கொள்ளையில் இவன் ஈடுபட்டு வந்தான். கைது செய்யப்பட்ட இவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் வியாபாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராயபுரம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் வியாபாரி பால முருகனை கத்தியால் குத்து 2 பவுன் நகையை பறித்து தப்பினார்.
இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் 19-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி சத்யா தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி சுகுமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரத்து 500 அபராத மும் விதித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் பழாஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரி. பனியன் தொழிலாளி, இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சம்பவதன்று லோகேஸ்வரி வேலை முடிந்து பஸ்சுக்காக மங்கலம் சாலை, தாடிகார முக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் லோகேஸ்வரி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற போது, லோகேஸ்வரி திருடன்...திருடன்.. என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் கொள்ளையர்களை விரட்டியுள்ளனர். இதனிடையே செல்போனை பறித்த வேகத்திலும், பொது மக்கள் விரட்டிய பதட்டத்தில் சென்ற கொள்ளையர்கள் சிறிது தூரத்தில் வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மத்திய போலீசார் கொள்ளையர்கள் இரண்டு பேரிடம் நடத்தி விசாரனையில் , பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த வெங்காளீஸ்வரன் மற்றும் சூரியகுமார் என்பதும், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது.
இங்கு கெம்பநாயக்கன் பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் டெபாசிட் செய்து வருகிறார்கள். மேலும் நகைகளை அடகு வைத்து கடனும் பெற்றுள்ளனர்.
இந்த வங்கி கிளை மேலாளராக அரிஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை வேலை நேரம் முடிந்து வங்கியை பூட்டி சென்றனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர் அங்கு வந்தான். அவன் வங்கிக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு பக்கம் திருப்பினான். வங்கியில் 2 ஷட்டர் உள்ளது. அதில் ஒரு ஷட்டரில் மட்டும் சென்டர் லாக் உள்ளது. மற்றொரு ஷட்டரில் சென்டர் லாக் இல்லை. அதனை மர்ம நபர் உடைத்தான். அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் உடைத்தான்.
அந்த சமயத்தில் அலாரம் ஒலித்தது. இந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதனை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதனால் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் தப்பியது.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வங்கி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வங்கி மேலாளர் அரிசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வங்கிக்கு விரைந்து வந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்தார். சூலூர் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், அன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரண நடத்தினார்கள்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வங்கியில் இருந்து சற்று தூரம் ஓடி நின்றது. வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம் இல்லை. ஆனாலும் வங்கியில் இருந்த யூ.பி.எஸ். மூலம் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் இயங்கி வந்தது. கேமராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி உள்ளது.
அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கியில் கொள்ளை அடிக்க வந்தவன் மின்சாரத்தை நிறுத்தி விட்டு வந்தானா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பற்றி தெரியவந்ததும் வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.