search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery jewellery money"

    ஒட்டன்சத்திரம் அருகே வீடுகள் மற்றும் இ-சேவை மையத்தில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகிலேயே சலூன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஜெயவேல் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஜெயவேல் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் நாச்சாத்தாள் (வயது 65) என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து 3 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சத்திரப்பட்டியில் உள்ள இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த இந்த கொள்ளை குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொரட்டூரில் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், கோல்டன் காலனியில் வசித்து வருபவர் லினா நாயர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர் தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் கமிட்டி உறுப்பினராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் வீட்டின் முதல் தளத்தில் தூங்கினார். காலை எழுந்து பார்த்த போது. முன் பக்க கதவு உடைந்து திறக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    லீனா நாயர் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார். கொள்ளை குறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதேபோல் அயனாவரம் பி.இ. கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் அப்பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரம், 3 செல்போன்கள், விளையாட்டு பொம்மைகள் ஆகியவறறை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அயனாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×