search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery way gang"

    செம்பட்டி பகுதியில் வழிப்பறி கொள்ளை கும்பலை போலீசார் மற்றும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

    ஆத்தூர்:

    செம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் செம்பட்டி பழனி சாலையில் சந்தை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவரிடம் இருந்த ரூ.1500 பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.

    ராஜா சத்தம் போட்டதைப் பார்த்துஅக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். மேலும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை பார்த்ததும் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.

    ஆனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். திடீரென சாலையில் கத்தியுடன் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களை பிடித்து விசாரித்தபோது பழனியைச் சேர்ந்த சக்தீஸ்வரன் (வயது 26), மதுரையைச் சேர்ந்த சிதம்பரசன் (35) என தெரிய வந்தது. 2 பேர் மீதும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது. போலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    ×