search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் அடுத்தடுத்தாண்டுகளில் நடைபெறுகின்றன.
    • இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என ரோகித் தெரிவித்துள்ளார்.

    மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மோதியது. இரண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    வருகிற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்த அணியையும் இவர்தான் வழி நடத்துகிறார்.

    இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 36 வயதான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது, குறிப்பாக ஒயிட்பால் (டி20) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.

    ஆனால், நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் ரோகித் சர்மா இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன் உடன் கவுரவ் கபூர் நடத்தும் "பிரேக்பாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது எட் ஷீரன் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.

    எட் ஷீரன் ஓய்வு எப்போது எனக் கேட்ட கேள்விக்கு,

    ரோகித் சர்மா: "இந்த நேரத்திலும் நான் நன்றாக விளையாடி வருகிறேன். ஆகவே, இன்னும் சில வருடங்கள் விளையாடும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.

    எட் ஷீரன்: இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வரைக்கும்?

    ரோகித் சர்மா: "ஆமாம். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். 2025-ல் இங்கிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்திய அணி அதற்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விகள் உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது." என்றார்.

    • அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • தினேஷ் கார்த்திக் களத்தில் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா அவரை கிண்டலடித்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக் 8 ரன்கள் என வெளியேறினர். அதனை தொடர்ந்து டுபிளிசிஸ் மற்றும் பட்டித்தார் ஆகிய இருவரும் அரை சதம் விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

    இறுதியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக தினேஷ் கார்த்திக் களத்தில் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா அவரை கிண்டலடித்தார். அந்த வீடியோவில் சிலிப்பில் நின்று கொண்டிருந்த ரோகித் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கை சபாஷ் டிகே, உலகக் கோப்பை அணியில் உன்னை சேர்த்திடலாம் என கிண்டலடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    களத்தில் ரோகித் சர்மா இதுபோன்று நிறைய பேரை கிண்டலடித்துள்ளார். அது தொடர்பான வீடியோ டிரெண்டாகும். அந்த வகையில் இந்த வீடியோவும் டிரெண்டாகி வருகிறது. உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை செல்லமாக ரோகித் சர்மா திட்டுவது அந்த நாட்களில் வைரலானது.



    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின

    இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "எந்த அணிக்கு செல்ல வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் விருப்பம். ஐபிஎல் தொடரில் உள்ள எல்லா அணிகளும் அவரை கேப்டனாக ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள். மும்பை அணியில் தற்போது நடந்தது போல் இல்லாமல் மற்ற அணிகள் ரோகித் சர்மாவை சரியாகக் கையாளும் விதத்தில், அவர் நிச்சயமாக வேறு அணிக்குச் செல்வார் என்று தெரிவித்துள்ளார்.

    • நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும்.
    • அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது.

    இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

    இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் அனைவரும் உலக கோப்பையில் வென்று கொடுத்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று பலரும் பல விதமான கதைகளை கூறி வருகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார். எனக்கு ரோகித் பற்றி நன்றாக தெரியும். அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு கூட அவர் முயற்சி செய்வார். நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மாற்றத்திற்கு ரோகித் சர்மா தயாராக இருக்க வேண்டும். எந்த சூழல் வருகிறதோ, அதனை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். மும்பைக்கு மட்டுமல்ல அவர் எந்த அணிக்கு சென்றாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரி தான் இருப்பார். கேப்டன் பதவி இல்லாததால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக அதில் இருந்து வெளியே வருவார். ஒரு சாம்பியன் வீரராக மீண்டும் திகழ்வார் ரோகித் அதிரடியை காண காத்திருங்கள் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    • இந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது.

    அதிலும், கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா சிவனுக்கு தந்து கையால் அபிஷேகம் செய்தும் தீபாராதனை காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாக நியமிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

     


    இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், 2025 ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் அணியில் இணைவதற்காக அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ரோகித் சர்மாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான ஒப்பந்தத்தின்படி சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் கேப்டனாக செயல்படுவார் என்றும், அதற்கான ஒப்பந்த தொகையை அவரே தெரிவிக்க ஏதுவாக ரோகித் சர்மாவுக்கு பிளாங்க் செக் (blank cheque) வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    எனினும், ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகுவது பற்றியோ, அவர் அடுத்த சீசனில் இருந்து மற்ற அணியில் விளையாடுவார் என்றோ இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பாண்ட்யாவின் கேப்டன்சி ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் விஷயமாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கி பாண்ட்யாவை நியமித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் பாண்ட்யாவுக்கு எதிராகவும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கோஷமிட்டு வந்தனர். பாண்ட்யா தலைமையில் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியது.

    இதற்கு பாண்ட்யாவின் கேப்டன்சி தான் காரணம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர். முதல் போட்டியில் ரோகித் சர்மாவை ஹர்திக் பீல்டிங் நிற்க கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதற்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு அதிகமாகியது. இந்த போட்டியில் பாண்ட்யா மீது ரோகித் கோபத்துடன் பேசுவார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் இந்த சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்ட்யாவின் கேப்டன்சி ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் போட்டியில் ஹர்திக் மற்றும் ரோகித் சர்மாவின் முடிவில் முரன்பாடு ஏற்படுவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. இது போட்டியில் மட்டுமல்லாமல் ஓய்வு அறையிலும் தொடர்கிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தில் இருக்கிறார்.
    • ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள்.

    மும்பை:

    ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில் தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

    இது குறித்து மனோஜ் திவாரி கூறியதாவது:-

    ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விஷயங்கள் மூலம் தெரிகிறது. அவர் ரசிகர்களின் எதிர்ப்பால் அழுத்தத்தை உணர்கிறார். நான் பெரிய விஷயம் ஒன்றை சொல்லப் போகிறேன். இந்த ஆறு நாள் இடைவெளியில் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோகித் சர்மாவை கேப்டனாக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள். அவர்கள் தான் ரோகித் சர்மா கேப்டன் பதவியை பறித்து இந்த சிக்கலை துவங்கி வைத்தார்கள்.

    உங்களுக்கு ஐந்து கோப்பை வென்று கொடுத்த கேப்டனை மாற்றினீர்கள். தற்போது புதிய கேப்டன் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றுத் தரவில்லை. அவரது கேப்டன்சியும் சரியில்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன.

    இவ்வாறு திவாரி கூறினார்.

    • மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.
    • நடப்பு ஐ.பி.எல் தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியாகவும் மும்பை உள்ளது.

    மும்பை:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.

    நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அந்த அணி இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியாகவும் மும்பை உள்ளது.

    இந்நிலையில் நேற்றையை ஆட்டத்தில் மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோகித் சர்மா, ரசிகர்களை பார்த்து ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக சத்தமிடாதீர்கள் என கையசைத்து கோரிக்கை வைத்தார்.

    ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து இரண்டு, மூன்று முறை கையசைத்து கோரிக்கை வைத்து ரோகித் சர்மா செய்த செயல்தான் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளது. ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்த ரோகித் சர்மாவின் செயலை ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித்திடம் இருந்து கேப்டன்ஷிப் பதவியை பறித்து பாண்ட்யாவிடம் கொடுத்தது ரசிகர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மும்பை அணி விளையாடும் போட்டிகளில் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.

    மும்பை அணி விளையாடிய முதல் 2 போட்டிகளில் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது.
    • மும்பை அணி பீல்டிங் செய்த போது மைதானத்துக்குள் ரசிகர் ஒருவர் நுழைந்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 125 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் தரப்பில் டிரெண்ட் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த போது ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து ரோகித் சர்மாவை நோக்கி சென்றார். அப்போது பீல்டிங் சரி செய்து கொண்டிருந்த ரோகித் இதனை சற்றும் எதிர்பாராதால் திடுக்கிட்டார்.

    அதன்பிறகு ரோகித் சர்மாவை கட்டியணைத்து ரசிகர் தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் கீப்பர் நின்ற இஷான் கிஷனை கட்டியணைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரோகித் சர்மா பயந்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
    • மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா 15 முறை டக் அவுட் ஆகி உள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ஒரு ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் ரோகித் டக் அவுட்டில் வெளியேறினார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தப்படியாக மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளனர்.

    • இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

    ×