search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 1½ lakh"

    • ராஜசேகரை மீண்டும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பணம் மற்ற யாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் சத்தியமூர்த்தி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி மர்ம நபர்கள் இவரை காருடன் கடத்தி சென்று நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.23 லட்ச த்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரை சென்னிமலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான ராஜசேகர் (32) என்பவர் அறந்தாங்கி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 5-ந் தேதி சரண் அடைந்திருந்தார்.

    இவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். பின்னர் சென்னி மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ராஜசேகரை அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    அப்போது அவர் தான் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுக்கு கொடுத்து விட்டு மீதி ரூ.1 லட்சத்தை தனது சகோதரியான திருச்சி அருகே கோவில் வீரக்குடியை தமிழரசி என்பவரிடம் கொடுத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜசேகரின் சகோதரி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி அவரி டம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    தற்போது ராஜசேகருக்கு போலீஸ் காவல் முடிந்ததால் போலீசார் ராஜசேகரை மீண்டும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் மற்ற யாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
    • பொன்னுராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    கரூர்:

    கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுராஜ். இவரது மகள் ஜமுனா. இவரது கணவர் தீபன். இவர்களது மகன் மித்ரன் (5). இவர் தனது தாத்தா பொன்னுராஜ் பாதுகாப்பில் இருந்தார். மித்ரனை கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி வகுப்பில் பொன்னுராஜ் சேர்த்தார்.

    இதற்காக ரூ.38 ஆயிரத்தை மித்ரனின் தாய் ஜமுனா ஆன்லைன் மூலம் கடந்த செலுத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் வகுப்பு தொடங்கும் என கூறிய நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடங்கவில்லை.

    இதுகுறித்து பொன்னுராஜ் அந்த பள்ளியை அணுகி விசாரித்தபோது முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரி பொன்னுராஜ் கேட்டதையடுத்து அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்வி கட்டணம் ரூ.38 ஆயிரம் திரும்ப செலுத்தக்கோரியும், ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் சேவைக்குறைபாடு ஏற்படுத்தியதற்காகவும், கடுமையாக நடந்து மன உளைச்சல் ஏற்படுத்திய காரணத்திற்காக ரூ.2 லட்சம் வழங்கக்கோரியும் பொன்னுராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அளித்த உத்தரவில் கல்விக்கட்டணம் ரூ.38 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடனும், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைப்பாட்டிற்காகவும் ரூ.1 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து தொகை வசூலாகும் தேதி வரை கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    ×