என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rs.7.89 lakhs"
- நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் இவர் புதிய வீடு கட்டுவதற்காக கடன் வாங்க திட்டமிட்டார்.
- ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை அனுப்பிய பிறகு கடனுக்கு முன் பணம் ஆக ரூ.7.86 லட்சம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 36). கட்டிட மேஸ்திரியான இவர் புதிய வீடு கட்டுவதற்காக கடன் வாங்க திட்டமிட்டார் . அதே நேரத்தில் அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீடு கட்டுவதற்கு ரூ.18 லட்சம் கடன் தருவதாக ஒரு மெசேஜ் வந்தது.
அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நில பத்திரங்கள் நகலை ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது . இதை அனுப்பிய பிறகு கடனுக்கு முன் பணம் ஆக ரூ.7.86 லட்சம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை நம்பிய விஜயகுமார் பல தவணைகளாக அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 7.86 லட்சம் அனுப்பினார். ஆனால் 3 மாதம் ஆகியும் பணம்கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை அந்த செல்போன் மற்றும் வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.