என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » russian woman molested case
நீங்கள் தேடியது "Russian Woman Molested Case"
திருவண்ணாமலையில் ரஷிய பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ரஷிய பெண் அலினா கற்பழிப்பு வழக்கில் அபார்ட்மெண்ட் உரிமையாளரான வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
வேலூர் சிறையில் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடந்தது. அப்போது குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணை திருவண்ணாமலை ஆசிரமத்திலிருந்து போலீசார் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். இங்கு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருடன் மற்ற கைதிகளும் நிற்க வைக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடந்தது.
அப்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை அவர் சரியாக அடையாளம் காண்பித்து உள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில் போலீசார் இறங்கினர்.
நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் திருவண்ணாமலை கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வந்தார். அவருடன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், வழக்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வந்தனர்.
இதையடுத்து மாஸ்திரேட்டு விக்னேஷ் பிரபுவிடம் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் சுமார் 16 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையும், ஆவணங்களும் தாக்கல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பலாத்காரம் செய்தல், மானபங்கம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்தில் மாஜிஸ்திரேட்டிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பின்னர் இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறும். பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணிற்கு வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வரை சுற்றுலா விசா உள்ளது. நீதிமன்ற விசாரணையில் அவர் சாட்சியம் கொடுத்த பிறகு ரஷியா செல்வார்.
இந்த வழக்கு தொடர்பாக விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ரஷிய இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் முதலில் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் தங்கியிருந்த ரஷியாவை சேர்ந்த இளம்பெண் அலினா. கடந்த 16-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுய நினைவின்றி கிடந்தார்.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நடந்த சம்பவம் குறித்து ரஷிய பெண் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அபார்ட்மெண்ட் உரிமையாளர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன் (வயது 35), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
ரஷிய பெண் சுற்றுலாவுக்காக கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். முதலில் அவர் செந்தில்குமார் என்பவர் நடத்தி வந்த விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அதிக வாடகை வசூலித்ததால், பாரதியின் அபார்ட்மெண்டுக்கு கடந்த 12-ந் தேதி சென்றார்.
வெளிநாட்டினர் விடுதிகளிலோ, வீடுகளிலோ தங்கினால் வெளிநாட்டினர் பதிவு அதிகாரிக்கு ‘பார்ம்-சி’ என்ற படிவத்தை வழங்க வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும்.
ரஷிய பெண் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து அவர் தங்கி இருந்த 2 இடங்களில் இருந்தும் ‘சி’ படிவம் வழங்கப்பட்டு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் ரஷிய பெண் முதலில் தங்கி இருந்த விடுதியின் உரிமையாளர் திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமாரும், 2-வதாக தங்கி இருந்த அபார்ட்மெண்டின் உரிமையாளர் பாரதியும் ‘சி’ படிவம் கொடுக்காதது தெரிய வந்தது. இதுகுறித்து செந்தில்குமார் மற்றும் பாரதி மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாரதி ரஷிய பெண் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மற்றொருவரான செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் பூரண குணமடைந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலையில் அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் ஆரணி கோர்ட்டில் ஆஜராகி மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமியிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
சட்ட ரீதியான விசாரணைக்காக சில நாட்கள் ரஷிய பெண் இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளதால் அவர் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார், நீதிபதி முன்னிலையில் குற்றவாளிகள் அடையாள அணி வகுப்பு நடத்தவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

திருவண்ணாமலையில் ரஷிய பெண் பலாத்கார வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரஷிய பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
திருவண்ணாமலை:
ரஷிய நாட்டை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண் கடந்த 12-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்து செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான அபார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 14-ந் தேதி விடுதி அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. 16-ந் தேதி காலை சந்தேகம் அடைந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அந்த அறையின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். பின்னர் அன்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரஷிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரஷிய பெண் தங்கி இருந்த அபார்ட்மெண்டை திருவண்ணாமலை அருகில் உள்ள வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 31) என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து அனுமதியில்லாமல் விடுதி நடத்தி வந்துள்ளார். அதே அபார்ட்மெண்டில் 5-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் பாரதியிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரஷிய பெண் பலாத்கார சம்பவத்தில் போலீசாருக்கு பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன் (35), அவர்களின் கார் டிரைவர் வெங்கடேசன் (30) மற்றும் பாரதியின் நண்பர் மணிகண்டன் (37) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் போலீசார் ரஷிய பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர் சுயநினைவின்றியும், அதிர்ச்சியிலும் இருந்ததால் எந்தவித தகவலையும் பெற முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
கடந்த 17-ந் தேதி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட அந்த ரஷிய பெண்ணை பார்வையிட்டனர். ரஷிய நாட்டை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து சென்றனர். ரஷிய நாட்டு தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு நேரில் வந்து அந்த பெண்ணை பார்வையிட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சுயநினைவுக்கு திரும்பிய ரஷிய பெண்ணிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வாக்குமூலத்தை கைப்பட எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
மேலும் நேற்று மாலை ரஷிய பெண்ணிடம் ஆரணி கிளை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு நடந்த சம்பவம் குறித்து ரகசிய வாக்குமூலம் பெற மருத்துவமனைக்கு 5.10 மணிக்கு வந்தார். அவர் சுமார் 2½ மணி நேரத்திற்கு மேல் அந்த பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.
இதையடுத்து இரவு 8 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஷிய இளம்பெண் சுற்றுலாவுக்காக கடந்த 3.6.2018 அன்று இந்தியாவுக்கு வந்துள்ளார். பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். முதலில் அவர் தங்கிருந்த அறைக்கு அதிக வாடகை வசூலித்ததால், மாற்று இடம் தேடியுள்ளார்.
இதுகுறித்து நான் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற அபார்ட்மெண்டை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். மேலும் சந்தேகத்தின் பேரில் நீலகண்டன், அவரது தம்பி பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தோம். இந்த நிலையில் ரஷிய பெண் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தில் பாரதி என்பவர் தன்னை 2 முறை பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 3 பேர் தன்னை மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் விசாரித்து பாரதியின் அபார்ட்மெண்டிற்கு கடந்த 12-ந் தேதி சென்றார். பின்னர் கடந்த 16-ந் தேதி காலை 7.50 மணியளவில் மயக்க நிலையில் இருந்து அந்த பெண்ணை பாரதி மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பாரதி - வெங்கடேசன்
இதுகுறித்து நான் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற அபார்ட்மெண்டை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். மேலும் சந்தேகத்தின் பேரில் நீலகண்டன், அவரது தம்பி பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தோம். இந்த நிலையில் ரஷிய பெண் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தில் பாரதி என்பவர் தன்னை 2 முறை பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 3 பேர் தன்னை மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
×

X