என் மலர்
நீங்கள் தேடியது "sale"
- ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும்,
திருச்செங்கோடு:
69-ஆவது அனைத்திந்தி ய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு நிறுவன தயாரிப்பு பொருட்கள், ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை மேளாவினை திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன் விற்பனை மேளாவினைப் பார்வையிட்டார்.
இந்த விற்பனை மேளா வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும், பொதுமக்கள் விற்பனை மேளா நடைபெறும் நாட்களில் பொருட்களைப் பெற்று பயனடையுமாறும் கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில்
அரியலூர்:
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உரிமம் இன்றி விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், தற்போது கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடிதொடங்கிஉள்ளது. விளைச்சல் அதிகரித்து அதிக வருமான தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டவிவசாயிகள் நிலக்கடலை விதைகளை வாங்கும் போது தமிழ்நாடுஅரசால் விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான நிலக்கடலை விதைகளை வாங்கவேண்டும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரக விதைகளை வாங்கும் போது விதைக்கான விற்பனை ரசீதை கேட்டுப் பெறவேண்டும்.
மேலும், தாங்கள் வாங்கிய விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் நிலக்கடலை விதைகளை விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கவேண்டும். விதை விற்பனை செய்யும் வியாபாரிகள் விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தாலோ, காலாவாதியான விதைகளை விற்பனை செய்தாலோ, ரசீதுவழங்காமல் விற்பனை செய்தாலோ விதை சட்டப்படி விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதைகள் தொடர்பான ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0431 -2420587 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
- கரூரில் குல்லா, ஸ்வெட்டர் விற்பனை சூடுபிடித்துள்ளது
- குளிர் காலத்தை முன்னிட்டு
கரூர்:
வடகிழக்கு பருவமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்றும் பரவலாக மழையும் பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதாலும், தற்போது குளிர் காலம் வர உள்ளதாலும் பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லா போன்ற ஆடைகளை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். இதனால் திருப்பூர், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கரூரில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக கரூரில் கோவை சாலை, கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்வட்டர், தலைக்கு அணியும் குல்லா விற்பனை சூடு பிடித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு அளவுகளில் ஸ்வட்டர் 350 ரூபாய் லிருந்து 850 வரையிலும், குல்லா 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
- பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர்.
- குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும்.
திருப்பூர் :
கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதில் வடமாநில இளைஞர்கள் உள்பட ஒருசிலர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சென்று, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக நைசாக பேச்சு கொடுக்கின்றனர். பின்னர் ஏதாவது மூளைச்சலவை செய்து பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர். இதுபோன்ற ஒருசில சம்பவங்கள் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.
எனவே வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், அதுபோன்று குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும். சந்தேகப்படும்படியாக அந்த நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும்திருமுருகன்பூண்டி போலீசார் பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிவுரையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
- கார்த்திகை தீப சிறப்பு கிப்ட் பேக் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது
- அஸ்வீன்ஸ் பேக்கரியில்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு கிப்ட் பேக் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன், தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் கூறுகையில்,
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அண்டு பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் - கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.
எங்களது நிறுவனத்தின் மூலம் அனைத்து பண்டிகை நாட்களையும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அந்தந்த பண்டிகைக்கு ஏற்ப இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு உகந்த, இனிப்பு மற்றும் பட்சணங்களை பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இதன்படி வரும் 6ம்தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் நிவேதனம் செய்து வழிபட வசதியாக அவல் பொரி உருண்டை, நெல்பொரி உருண்டை, அதிரசம், கடலை உருண்டை, மனவலம் உருண்டை, அகல்விளக்கு ஆகியவை அடங்கிய சிறப்பு கிப்ட் பேக் விற்பனையை தொடங்கியுள்ளது.
தற்போது கிப்ட் பேக் தேவை படுவோருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.அஸ்வின்ஸ் உணவுத் தொழிற்சாலையின் அவுட் லெட் மற்றும் அனைத்து கிளைகளிலும் தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் கார்த்திகை தீப சிறப்பு கிப்ட் பேக் கிடைக்கும் என தெரிவித்தனர்.
- புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.
- மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.
மாடுகளை வாங்கவும், விற்கவும் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதில் இறைச்சி மாடு ரூ.15,000-க்கும், கன்று குட்டி ரூ. 8000-க்கும், பசு மாடு ரூ.20,000-க்கும், எருமை மாடு ரூ.25,000-க்கும் விற்பனை
செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மீறி குப்பைகள் கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம்.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது: -
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சீர்காழி நகராட்சியில் உள்ள24 வார்டுகளிலும் தற்காலிக மற்றும் நிரந்த தூய்மைபணியாளர்களை 107பேரை கொண்டு நாள்தோ றும் வீடுகளில் வழங்ப்படும் மக்கும்குப்பைகள்,மக்காத குப்பைகளை தரம்பிரித்து வாங்கப்படுகிறது.
நகரில் நாள்தோறும் மக்கும் குப்பை ஆறரை டன் உட்பட 12டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.இவ்வாறு சேகரம் ஆகும் குப்பைகள் நகராட்சி உரகிடங்கிற்கு கொண்டுசெல்லப்படுகிறது.
அதில் மக்கும் குப்பைகள் மட்டும் உரகிடங்கில் கொட்டப்படுகிறது.மக்காத உடைந்த பாட்டில், நெகிழி போன்ற குப்பைகள் அரியலூர் சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மைபணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ளவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
உரகிடங்கில் குப்பை மேடு இல்லாத நிலையை உருவாக்கிட நடவடிக்கைகள் நடை முறைப்படுத்தபடுகிறது.
அவ்வாறு நகரில் பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுத்திட குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகருகே வசிக்கும் மக்கள் அந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர் கொண்ட குழு அமைத்து, குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து தடுத்திடவும் மீறி கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம் நடைமுறை ப்படுத்த ப்படவுள்ளது. தூய்மையான நகராட்சியாக மேம்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உர கடைகளில் யூரியா, டிஏபி உள்பட அத்தியாவசிய உரங்கள் விற்பனை நடைபெற்று வந்தது.
- யூரியா போன்ற அத்தியாவசிய உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சாவூர்மாவட்டம், பாபநாசம் அதனை சுற்றியுள்ள திருக்கரு காவூர், மெலட்டூர், தேவராயன்பேட்டை, அகரமாங்குடி, உள்பட பல பகுதிகளில் அரசு வேளாண்மை கூட்டுறவு சங்க உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் உள்ளது.
இந்த உர கடைகளில் யூரியா, டிஏபி உள்பட அத்தியாவசிய உரங்கள் விற்பனை நடை பெற்று வந்தது.
இந்நிலையில் இந்த உரகடைகளில் தற்போது யூரியா உள்ளிட்ட அத்தியாவசிய உரங்கள் கிடைக்காததால் சம்பா விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது சம்பா பருவத்தில் நடவு பணிகள் முடிந்து 20 நாட்களை கடந்த நிலையில் சம்பா பயிர்களுக்கு உரம் தெளிக்கக்கூடிய பருவமாகும் சம்பா பயிருக்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள் மெலட்டூர், திருக்கருகாவூர், பாபநாசம் உள்பட முக்கிய பகுதிகளிலும், அரசு வேளாண்மை கூட்டுறவு கிடங்குகள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை மையங்களில் யூரியா கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தனியார் உர வியாபா ரிகள் சிலர் இணை உரங்கள் வாங்கினால் மட்டுமே யூரியா தரப்படும் என இணை உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனர் ஆகையால் சம்பா பயிர்கள் வளர்ச்சிக்கு யூரியா போன்ற அத்யாவசிய உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ காய்கறிகள் 4,410 கிலோ பழங்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 555 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவை ரூ.8.11 லட்சத்திற்கு விற்பனையானது. இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
- இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதி களவில் வாங்கி சென்றனர்.
பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள், பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள
11 உழவர் சந்தைகளிலும் இன்று
984 விவசாயிகள், பல்வேறு 651 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 245.805 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 54,393 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை களில் குவிந்தனர்.
- குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவில் மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளன. இதேபோல் மீன் மார்க்கெட், இறைச்சி மார்க்கெட்டுகளும் உள்ளன.
இந்த கடை மற்றும் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை சீசன் நாட்களில் மீன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும்
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை
களில் குவிந்தனர். குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆடு, கோழி இறைச்சி , மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று 1 கிலோ ஆட்டுக்கறி - ரூ.600- ரூ.700, பிராய்லர் கோழிக்கறி - ரூ.200, நாட்டுக்கோழி கறி - ரூ.560- ரூ.600, மீன் வகைகள் ( ரகத்தை பொறுத்து)- ரூ.125- ரூ.700, என்கிற விலையில் விற்கப்பட்டது.
- நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய மாட்டு சந்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது.
- மொத்தம் ரூ.2 கோடிக்கு நேற்று ஒரே நாளில் வர்த்தகம் நடந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய மாட்டு சந்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் இறைச்சி மாடுகள், வளர்ப்பு மாடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை கொண்டு வந்தனர்.
கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இவர்கள் மாடுகளை வாங்கி கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர்.
இறைச்சி மாடுகள் ரூ.19 ஆயிரம், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம், கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் என விலை போனது. கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்று குட்டிகள் ரூ.11 ஆயிரம் முதல் விற்பனையானது. மொத்தம் ரூ.2 கோடிக்கு நேற்று ஒரே நாளில் வர்த்தகம் நடந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.