என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sale of seeds in"
- விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் விதை ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டனர்.
- உரிய தகவல்களுடன் விதை விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
ஈரோடு:
மொடக்குறிச்சி வட்டார மையப்பகுதிகளில் அமைந்துள்ள விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி மற்றும் ஈரோடு விதை ஆய்வாளர் நவீன் திடீர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது உரிய ஆவணங்களான பதிவுச் சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாத விதை குவியல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறியப்பட்டு, 20 விதை குவியல்களில் விதை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன் மதிப்பு 958 கிலோ விதைகளின் மதிப்பு சுமார் ரூபாய் 6,34,000 ஆகும்.
இது குறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி கூறுகையில்,
உரிய ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் விதி மீறலாகும். விதி மீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் விதை விலை பட்டியல் பலகை, விதை கொள்முதல் பட்டியல், விதை இருப்பு பதிவேடு, உரிய தகவல்களுடன் விதை விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.