search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Anna Park"

    சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa
    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இந்த மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார்.



    சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் விபத்துகளை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

    இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நல உதவிகளையும் வழங்குகிறார்.

    இந்த விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa


    சேலம் அண்ணா பூங்கா அருகே இளம்பெண் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் அருகே நேற்று மாலையில் இளம்பெண் ஒருவர், செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணின் மீது மோதுவது போல் வந்து செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், அந்த பெண் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

    உடனே 2 வாலிபர்களும் அந்த பெண்ணின் கண்ணத்தில் பளார், பளார் என அடித்து உதைத்து செல்போனை பறித்தனர். இதில் அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழ முயன்றார்.

    இதை பார்த்து பொதுமக்கள் அங்கு திரளுவதற்குள், 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். செல்போனை பறிகொடுத்த பெண் அழுது கொண்டே இருந்தார். அவருக்கு பொதுமக்கள் ஆறுதல் கூறினார்கள்.

    சமீபகாலமாக பெரியார் மேம்பாலம் அருகே அடிக்கடி வழிப்பறிகளும், கொள்ளை சம்பவங்களும் நடக்கிறது. வலம் வரும் கொள்ளையர்கள் பெரியார் மேம்பாலம் அருகே கடைகள், காந்தி விளையாட்டு மைதானம், பூங்கா இருப்பதால் காதல் ஜோடிகள், பொதுமக்கள் தினமும் அதிக அளவில் கூடுவார்கள். கொள்ளை கும்பலின் பார்வை தற்போது இந்த பகுதியின் மீது விழுந்திருக்கிறது. அந்த பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக பெண்களை குறி வைத்து வழிப்பறி செய்கிறார்கள். இதனால் பெண்கள் பீதியில் உள்ளனர். அவர்களை மாநகர போலீசார் கமி‌ஷனர் சங்கர் கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×