என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » salem youth dies
நீங்கள் தேடியது "Salem youth dies"
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீடு கட்டுமான பணிக்காக மணல் அள்ளியபோது மண் சரிந்து பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன், விவசாயி. இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 21), பட்டதாரி. இவரது நண்பர் பேளூரைச் சேர்ந்த முத்து.
லோகேஸ்வரன் வீட்டு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக மணல் தேவைப்படுவதால் லோகேஸ்வரனும் அவரது நணபர் முத்துவும் பேளூர் வசிஷ்டநதி தடுப்பணை அருகே மணல் எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி இருவரும் நள்ளிரவில் அங்கு சென்று குழி தோண்டி மணல் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராதவிதமாக மணல் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் மணலுக்குள் புதைந்தனர். ஆனால் முத்து மட்டும் தட்டுத்தடுமாறி வெளியே வந்து உறவினர்களிடம் விஷயத்தை கூறினார்.
உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லோகேஸ்வரனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். காயம் அடைந்த முத்துவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு லோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாசில்தார் வள்ளிதேவி, மற்றும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

×

X