search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sales of vegetables increased"

    • தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    சேலம்:

    தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. மேலும் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாநகரில் திருமணிமுத்தாறு ஆற்று பாலம், வ.உசி.மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டு களுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. ஊட்டியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.46, பீன்ஸ்-75, மிளகாய்-ரூ.34 முள்ளங்கி-ரூ.20, பாகற்காய்-ரூ.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அவரை-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.24, புடலங்காய்-ரூ.20 தக்காளி-ரூ.15, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.34, உருளைக்கிழங்கு-ரூ.34, விற்பனையாகி வருகிறது.

    மழை காரணமாக மார்க் கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வரத்தைவிட இந்த வாரம் சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.

    ×