search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samba Rice"

    • சம்பா நெல் சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு பதிவு செய்ய செய்யுமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • வருகிற நவம்பர் 15-ந்தேதிக்குள் விவசாயிகள் பிரீமியம் செலுத்த கடைசி நாளாக 15.11.2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறையின் மூலம் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் குறித்து மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் பயிர்க்கு பயிர் காப்பீடு செய்திட 2022- 23 -ம்ஆண்டுக்கு ஹெச்.டி.எப்.சி மற்றும் இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் பெறப்பட்டது. இந்த பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும். பண்ணை வருவாயை நிலைப்ப டுத்தவும் வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பிரீமியம் செலுத்த கடைசி நாளாக 15.11.2022 நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நெல் சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.394.50 பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். பயிர்கள் முழுமையாக பாதிக்க ப்பட்ட இடங்களுக்கு காப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.26,300 வழங்கப்படும்.இத் திட்டத்தில் இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் - பரமக்குடி, போகலூர், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கும், ஹெச்.டி.எப்.சி - வங்கியில் மூலம் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்திட வேண்டும்.

    விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது தங்கள் வழங்கப்படும் அனைத்து தகவலும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும்போது ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ அல்லது சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில் தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.

    எனவே விவசாயப் பொதுமக்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×