search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand theft"

    • தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறையை சேர்ந்தவர் முருகன் என்ற முருகேசன் (வயது 45). இவரது மனைவி இந்திரா. இவர் இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் முருகேசன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று அள்ளி வந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய குளத்தில் மட்டு மல்லாது, அரசு விதிகளை மீறி அந்த குளத்தின் அருகே இருந்த சங்கனேரி குளத்திலும் திருட்டுத்தனமாக அவர் மண் எடுப்பதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட குளத்திற்கு சென்று மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குளத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளப்பட்டது உறுதியானது.

    இதனைத்தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்.

    தொடர்ந்து அங்கு மண் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்த தனராஜ், ஆனந்தகுமார் என்ற 2 டிரைவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து முருகேசன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் மண் திருட்டு வழக்குப்பதிவு செய்து தனராஜ், ஆனந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் அள்ளிச் செல்வதாக ராமநத்தம் போலீசாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து ராம நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் பெண்ணங்கோனம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கொளஞ்சிவேல் (வயது 50) என்பவரையும், அவரது மாட்டு வண்டியையும் மடக்கிப் பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    கெடிலம் ஆற்றிலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு 3 மாட்டு வண்டிகள் வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை யடிக்கப்ப டுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிர ண்டு மகேஷிற்கு தகவல் கிடைத்தது. இதையடு த்து திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் கெடிலம் ஆற்றுப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கெடிலம் ஆற்றிலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு 3 மாட்டு வண்டிகள் வந்தது. இதனை போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த உடையாந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 38), முருகேசன் (40), கணபதி (41) ஆகிய 3 பேரை கைது செய்தனர். திருநாவலூர் போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரக்‌ஷா கட்சேவும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளனா்.
    • 5 லட்சம் டன்களுக்கும் மேலான மணல் மற்றும் கருங்கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேவுக்கும் அவரது மருமகளும் பாஜக மக்களவை எம்.பியுமான ரக்ஷா கட்சேவுக்கும் ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேவும் அவரது மருமகளும் பா.ஜ.க. எம்.பி.யுமான ரக்ஷாகட்சேவும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளனா். அதில் 5 லட்சம் டன்களுக்கும் மேலான மணல் மற்றும் கருங்கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே ரூ.137.14 கோடி அபராதத் தொகையை 15 நாள்களுக்குள் அரசுக்குச் செலுத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

    ஏக்நாத் கட்சே கடந்த 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப். இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கெடிலம் ஆற்றுப்பகுதி சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் அருகே போலீசார் சென்றனர்.

    போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயற்சித்தனர். இருந்தபோதும் அவர்கள் தப்பிவிட்டனர். இதை யடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அதில் கெடிலம் ஆற்றில் இருந்து திருட்டுத் தனமாக மணலை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக வேனை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு சம்பவத்தில் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 4 பேரிடம் விசாரணை நடத்தி 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வையகளத்தூர் கிராமத்தில் உள்ளது கருவ கண்மாய். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்கண்மாயில் அடிக்கடி சவடு மண்களை டிராக்டர், லாரி, மாட்டுவண்டிகள் கொண்டு அள்ளுவதாக கண்டவராயன்பட்டி காவல் ஆய்வாளர் கலைவாணிக்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அவர் அதிரடியாக கருவக் கண்மாய்க்கு போலீசாருடன் சென்றார். அப்போது அங்கு ஒரு ஜே.சி.பி. எயந்திரம் கொண்டு 3 டிராக்டர்களில் சவடு மண்ணை அள்ளி கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கீழத்தெரு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் பிரபு (26), வள்ளியப்பன் (67), வீரையா (40) மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ரகு (31) ஆகிய நான்கு பேரிடம் விசா ரணை நடத்தி 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி குரூப் கிராம நிர்வாக அலுவலர் ரிஹானாபேகம் கொடுத்த புகாரின் அடிப் படையில் வழக்குபதிவும் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    • டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

    இது குறித்து தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாகவும், திங்கட்கிழமை நடைபெறும் முகாமில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், திம்மாம்பேட்டை போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது, ஆவாரங்குப்பம் அருகே உள்ள பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த நபரை மடக்கி பிடித்தனர்.

    போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 51) என்பதும் அவர் ஆற்று பகுதியில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் அள்ளி விற்று வந்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீசார் அவர் மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மணல் திருட்டை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சாம்பவர்வடகரை அருகே ஓடையில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை வாலன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 37). இவர் சுப்பையாபுரம் அருகே உள்ள புழுவாய் பொட்டல்குளம் ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.

    மணல் திருட்டுக்கு பயன்படுத்திய சிறிய வகை டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    • இரவு நேரங்களில் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருகிறது.
    • மணல் கொள்ளை மாட்டுவண்டி, டிராக்டர் டிப்பர் மூலம் நடக்கிறது.

    கடலூர்:

    திட்டக்குடி வெள்ளா ற்றில் இரவு நேரங்க ளில் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெள்ளாற்றங்கரையோரத்தில் திட்டக்குடி, வதிஷ்ட்ட புரம், தரும குடிகாடு, இடைச்செருவாய் உள்ளிட்ட கிராமங்களில் மணல் கொள்ளை மாட்டுவண்டி, டிராக்டர் டிப்பர் மூலம் நடக்கிறது. இரவு முழுக்க மணல் திருடுவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை . வெள்ளாற்றில் பரவலாக மணல் திருட்டு என்பது வாடிக்கையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கு காலத்தில் மணல் திருட்டு சிறிது குறைந்திருந்தது. ஆனால் சில நாட்களாக வெள்ளாற்றில் மணல் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது. தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சமூகவிரோத கும்பலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வருவாய் துறை, காவல் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரி வித்தும், அவர்களை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதில் அரசியல் தலை யீடும் இருப்பதால் மணல் கொள்ளையர்களை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இனி வெயில் காலம் என்பதால் நீர்மட்டம் குறையும் நிலையில் உள்ளது அரசு அதிகாரிகள் பொறுப்புடன் ஓரளவு செயல்பட் டால் இது போன்ற மணல் திருட்டை கனிமவளத் திருட்டை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கை.

    • நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.

    மணல் திருட்டு

    நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி கிராம பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப் பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஊராட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அம்பை

    அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் ஆறுமுகப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த மனுவில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் தகவலின் பேரில் ரூ.7,500 செலுத்தினேன்.

    ஆனால் என்னிடம் அதிக அளவு பணம் பெறப்பட்டுள்ளது. மேலும் 6 மாதம் ஆகியும் அதற்கான ரசீதுகள் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    பட்டா நிலம்

    நாங்குநேரி தாலுகா மேல முனைஞ்சிபட்டியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் 85-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பு பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் அதில் நாங்கள் வீடு கட்டாமல் வைத்துள்ளோம். தற்போது அந்த பட்டாவை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    பெண் புகார்

    மேலப்பாளையத்தை சேர்ந்த முகம்மது நஸ்ரின் சிபிகா (வயது 23) என்பவர் கொடுத்த மனுவில், நான் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது ரூ.1 லட்சமும், சீர்வரிசை பொருட்களும் எனது குடும்பத்தினர் கொடுத்தனர்.

    தற்போது எனது கணவர் தொழில் செய்ய பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு என்னை துன்புறுத்தி வருகிறார். எனவே அவரது குடும்பத்தினரும் என்னை துன்புறுத்தி வருகிறார்கள். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • நேற்று இரவு சுமார் 1.30 மணி அளவில் பிலிக்கல்பா ளையம் காவிரி ஆற்று பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது காவிரி ஆற்றுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுமார் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் கலையரசனுக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி கலைய ரசன் தலைமையில் ஜேடர்பா ளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, தனிப்படை சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ,தனிப்படை தலைமைக் காவலர் பிரவீன் ஆகி யோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு சுமார் 1.30 மணி அளவில் பிலிக்கல்பா ளையம் காவிரி ஆற்று பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது காவிரி ஆற்றுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுமார் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் மணல் மூட்டைகளின் சாக்குகளை அறுத்து மணலைகொட்டிச் சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் பரமத்தி வேலூர் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி மணல் திருட்டில் ஈடுபட்டால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் டி.எஸ்.பி. கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது.
    • அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்கள் திருடப்பட்டு உள்ளது.

    மதுரை

    கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார்.

    அதில், தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்கள் திருடப்பட்டு உள்ளது.

    இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டும் ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்து ஆற்று மணலை திருடி வருகின்றனர்.சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றி உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இருந்தும் சட்ட விரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? என கேள்வி எழுப்பினர்.

    மேலும், தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது எனக் கூறி வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு பிறகு நடைபெறும் என்று தெரிவித்து ஒத்திவைத்தனர்.

    ×