search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandhyagam"

    • அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • சண்டியாகம் 23-ந் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25-ந் தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்திப் பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா அம்மனுக்கு பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    முன்னதாக பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அம்மனுக்கு மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்க ப்பட்டது.

    நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பால்குட ஊர்வலம் மற்றும் ரதக்காவடி ஊர்வலம் வரும் 22 தேதியும் , மகா சண்டியாகம் 23ஆம் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

    இவ்விழாவில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி விஜயேந்திர சுவாமிகள் செய்திருந்தார்.

    ×