search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Santhinagar"

    • நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் கோபால சமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து சட்ட தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சாந்தி நகரில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் கோபால சமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து சட்ட தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சாந்தி நகரில் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட நீதிமன்ற 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சுசிலா வரவேற்று பேசினார். மூத்த வழக்கறிஞர் ஜோதி முருகன், வழக்கறிஞர் சங்க செயலாளர் காமராஜ், கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    கிராம உதயம் தன்னார்வ தொண்டர் மாரியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கலந்து கொண்ட அனை வருக்கும் அமைப்பு சாரா அடையாள அட்டை மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.

    ×