search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satellite city"

    திருப்பரங்குன்றம் அருகே துணைக்கோள் நகரம் அமைய உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் இன்று அகற் றினர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி தோப்பூர் பகுதியில் 572 ஏக்கர் பரப்பளவில் துணைக்கோள் நகரம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதில் உச்சபட்டி பகுதியில் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை வழங்க விவசாயிகள் மறுத்து வந்தனர். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூணான்பட்டி பகுதியில் 18 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செயற் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.

    அவர்கள் 18 ஏக்கர் இடத்தில் இருந்த மரங்களை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றினர். இதற்கு மகாதேவன் என்ற விவசாயி எதிர்ப்பு தெரிவித்தார்.

    திடீரென்று அவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டினார். பெண்களும் மண்எண்ணை குடித்தும், கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்வோம் என மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    செங்கல்பட்டில் 500 ஹெக்டேர் பரப்பளவில் ‘சாட்டிலைட்’ நகரம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
    சென்னை:

    சென்னை நகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, சென்னை அருகே ‘சாட்டிலைட்’ நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட இந்த நகரத்தை சென்னை அருகே உள்ள செங்கல்பட்டில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 500 முதல் 1000 ஹெக்டேர் பரப்பளவில் இதை அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அரசு இதுபற்றி கருத்து கேட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை தயாரிக்கும்படி அரசு கேட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.

    இந்த திட்டத்தின்படி சாட்டிலைட் நகரம் சென்னை பெருநகரத்தின் துணை நகரமாக அமையும். கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்கும் பயன்படும். எனவே இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், நில உரிமையாளர்களின் ஒத்துழைப்பு தேவை.

    எனவே நிலம் வழங்கும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதன்படி நில உரிமையாளர்களுக்கு மாற்று தொழில், வாரிசுகளுக்கு அரசு வேலை போன்றவற்றை வழங்க உறுதி அளிக்க வேண்டும். நிலத்துக்கு தகுந்த விலை வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    1000 ஹெக்டேரில் சாட்டிலைட் நகரம் அமைக்கும் திட்டம் இருந்தாலும் முதல் கட்டமாக 500 ஹெடேரில் இந்த நகரத்தை அமைக்கலாம். இதன் மூலம் கிராமப்புற மக்களும் பொருளாதார வளர்ச்சி பெறுவார்கள். சென்னை நகரின் மக்கள் தொகை நெருக்கடியை குறைக்கவும் இது பயன்படும்.

    இங்கு மக்களுக்கு தேவையான, நவீன வசதிகளுடன் தகவல் தொடர்பு, சாலை, புதிய தொழில்கள், கல்வி, மருத்துவம் உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியான நிலங்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இந்த திட்டத்துக்கான ஆய்வை நடத்தி அரசிடம் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் செங்கல்பட்டு பகுதியில் சேர்ட்டிலைட் நகரம் உருவாக்குவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×