search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saturn transition ceremony at"

    • சனீஸ்வரபகவானுக்கு சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு என்று ஒரு தனி சன்னதி உள்ளது.

    அங்கு அமைந்துள்ள சனீஸ்வர பகவானுக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 நிமிடத்திற்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    இதில் பவானி, குமாரபாளையம், லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறிய நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம் பெயர்ந்ததை தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு இந்த சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 

    ×