என் மலர்
நீங்கள் தேடியது "scam"
- பயனர்கள் இலவச லேப்டாப் பெற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி இலவச லேப்டாப் திட்டம் 2023-24 எனும் தலைப்பு கொண்ட போஸ்டர் வைரல்.
இந்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏமாற்றுவதை குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள், இந்திய அரசு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல்கள் அடங்கிய வலைதளத்தை உருவாக்கியுள்ளனர்.
மேலும் பயனர்கள் இலவச லேப்டாப் பெற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இந்த வலைதளம் மற்றும் வைரல் தகவலை நம்ப வேண்டாம் என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்த பதிவுகளில்- பிரதமர் நரேந்திர மோடி இலவச லேப்டாப் திட்டம் 2023-24 எனும் தலைப்பு கொண்ட போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை பத்திரிகை தகவல் மையம் கண்டறிந்து, அதனை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வில் மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தை அறிவிக்கவே இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்தியா முழுக்க எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று வைரல் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று பத்திரிகை தகவல் மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
- சமூக வலைததளங்களில் நடந்து வரும் இந்த நூதன மோசடியில் ஏமாறாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு சைபா் கிரைம் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா்.
- இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறாா்கள்.
சென்னை:
சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் மூலம் குறுஞ் செய்திகள் அல்லது விளம்பரங்கள் வாயிலாக நிதி மோசடி அதிக அளவில் நடை பெறுகிறது. ஒரே ஒரு லைக் போட்டால் ரூ.200 கிடைக்கும் என்று மக்களை மயக்கி ஏமாற்றி நூதனமாக பணம் பறிக்கிறார்கள்.
சமூக வலைததளங்களில் நடந்து வரும் இந்த நூதன மோசடியில் ஏமாறாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு சைபா் கிரைம் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சைபா் கிரைம் போலீசாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மக்களை சமூகவலை தளத்தின் மூலம் தொடா்பு கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. முதலில் சில யூடியூப் காணொலிகளுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என பொது மக்களை நம்ப வைக்கின்றனா். அதற்கு சிறிது பணமும் கொடுக்கிறாா்கள். பின்னா், அவா்கள் அனைவரும் ஒரு டெலிகிராம் குழுவில் சோ்க்கப்பட்டு, சில ஓட்டல் பக்கங்கள், நிறுவனங்களுக்கு லைக் செய்ய சொல்லி அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
இதற்கிடையில் இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறாா்கள். அவற்றில் பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்றவற்றில் மக்களை முதலீடு செய்ய வைக்கின்றனா். இதற்கு பயனாளா் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கம் செய்கின்றனா்.
பொதுமக்களை நம்ப வைக்க, மோசடி நபா்கள், தாங்கள் ஏற்கெனவே இதில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றதைப்போல் போலியான ஆதாரங்களைக் காட்டுவா். இதை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்வா். முதலில் லாபம் வருவதைப்போல் உருவகம் செய்யப்பட்டு மக்களின் முதலீட்டுத் தொகை அதிகரிக்கத் தொடங்கியவுடன் பல்வேறு பொய்களைக் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனா்.
எனவே, சமூகவலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபா்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ, லிங்க்கை தொடவோ, தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் பெறப் படும் கடவுச்சொல்லை யாருடனும் பகிரவோ வேண்டாம்.
1930 என்ற உதவி எண்ணை 24 மணி நேரத்துக்குள் தொடா்பு கொண்டால் இழந்த பணத்தை விரைவில் மீட்டெடுக்க முடியும். நிதி இழப்பு அல்லாத பிற புகாா்களுக்குwww.cybercrime.gov.in-ல் உள்நுழைந்து புகாரை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
- காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 26). இவர் மின்வாரிய ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் முகமது ஜமீல் (28). ஐடி கம்பெனி ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தனித்தனியாக இவர்களின் செல்போனை தொடர்பு கொண்டார்.
அவர் பெங்களூருவை சேர்ந்த குமார் என்றும் ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் வீட்டில் இருந்த நகைகள் அடகு வைத்தும் மற்றும் நண்பர்கள் உறவினர்களிடமிருந்து கடனாக பணத்தை பெற்றனர்.
ஞானபிரகாஷ் தான் வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்துடன் கடந்த 4-ந் தேதி வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த குமார் ஞானபிரகாஷிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது காரில் இருந்து போலீஸ் உடையில் இறங்கிய நபர் உட்பட 4 பேர் நாங்கள் அனைவரும் போலீஸ்காரர்கள்.
உங்களிடம் உள்ளது ஹவாலா பணமா என சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி ஞானபிரகாசை காரில் ஏற்றுக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு சென்றனர். காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.
இதேபோல் முகமது ஜமீல் அன்று மாலையே வேலூர் மாங்காய் மண்டி அருகே ரு.15 லட்சத்துடன் காத்திருந்தார். அப்போது காரில் போலீஸ் உடையில் வந்த நபர்கள் முகமது ஜமீனிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு காரில் சென்றனர்.
பின்னர் முகமது ஜமீல் வடக்கு போலீஸ் நிலையம் வந்து விசாரித்த போது பணத்தை பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது.
இதுகுறித்து ஞானபிரகாஷ் மற்றும் முகமது ஜமீல் ஆகியோர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ.40 லட்சம் மோசடி செய்தது பெங்களூருவை சேர்ந்த டேனியல், அருண்குமார், அம்ரோஸ், கிருஷ்ணகிரியை சேர்ந்த கண்ணன் என தெரியவந்தது. அவர்களை பெங்களூரில் மடக்கி பிடித்தனர்.
பிடிபட்டவர்களில் டேனியல் என்பவர் போலீஸ் சீருடையில் வந்து மிரட்டியது தெரிய வந்தது
போலீசார் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் பொன்னையை சேர்ந்த ஒருவர் பணம் பறிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ 2.30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.
- பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
- வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி கொண்டுரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (43). இவரது மனைவி எழிலரசி (33). இவர்களிடம் பவானியை சேர்நத ஒருவர் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.
பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
பட்டதாரிகளான கணவன், மனைவி 2 பேரும் லேப்டாப் மற்றும் செல்போனில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி பவானி, அம்மாபேட்டை, சித்தோடு, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏஜெண்டுகள் நியமித்து அவர்கள் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை ஆன்லைன் மூலம் அனுப்பி பரிசு விழும் என கூறி பொதுமக்களை நம்ப வைத்து லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து வாட்ஸ்அப் குழுவில் இருந்த பவானியை சேர்ந்த அப்புசாமி, காடையாம்பட்டியை சேர்ந்த தினேஷ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகராஜன், ஆதிநாராயணன், அம்மாபேட்டை குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கண்ணுசாமி, நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த ரசூல், சித்தோடு நால்ரோடு பகுதியை சேர்ந்த வேலுமணிகண்டன், பெருந்துறையை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 9 ஏஜெண்டுகளையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 11 பேரிடம் இருந்து 2 லேப்டாப், 2 டேப், 11 செல்போன்கள், 2 வங்கி பாஸ் புத்தகம், ஒரு ஏ.டி.எம். கார்டு, ரூ.13 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கைதான 11 பேரும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஆண்கள் 10 பேர் பவானி கிளை சிறையிலும், எழிலரசி கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எலக்ட்ரிக்கல் கடைக்கு வந்த முதியவர் ஒருவர் ரூ.1,01,196க்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கினார்.
- நிகில் ஜெயன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நிகில் ஜெயன்(வயது29). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, நிகில் ஜெயன் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் ரூ.1,01,196க்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கினார்.
பின்னர் கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக மெசேஜை காட்டி விட்டு சென்றார். தொடர்ந்து அதேநபர் மறுநாள் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தார்.
அவரிடம் நிகில் ஜெயன் நீங்கள் அனுப்பிய தொகை எனது வங்கி கணக்கில் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு அவர் சர்வர் பிரச்சினையாக இருக்கும் என்று கூறி மீண்டும் ரூ.20 ஆயிரம் அனுப்பி விட்டு அவரது செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் அவர் முதலில் அனுப்பிய தொகை சில நாட்கள் ஆகியும் அவரது வங்கி கணக்கிற்கு வரவில்லை.
இதனையடுத்து நிகில் ஜெயன் அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் வாலிபர் ரூ.5 ஆயிரம் மட்டுமே அனுப்பினார். ரூ.1,01,196க்கு பொருட்கள் வாங்கிவிட்டு அவர் ரூ.25 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள 76,196 ரூபாயை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிகில்ஜெயன் அந்த நபரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து நிகில் ஜெயன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கூகுள் பே- மூலம் பணம் அனுப்பியதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் காய்கறி கடை உரிமையாளர் உக்கடத்தை சேர்ந்த ஷேக்அப்துல் காதர்(50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
- 50-க்கும் மேற்பட்டோர் பணம் வாங்கி ஏமாற்றிய பெண்கள் வீடு முன்பு திரண்டனர்.
வடவள்ளி,
கோவை சிறுவாணி சாலை ஆலாந்துறையில் இளம்பெண் ஒருவர் கண்கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடி வந்தார்.
அந்த சமயம் மத்தவ ராயபுரத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் இளம்பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்கள். 2 மகள்களில் ஒருவர் தான் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், உங்கள் கணவருக்கு வேலை வாங்கி தருகிறேன், அதற்கு பணம் செலவாகும் என கூறி இருக்கிறார்.
அதை உண்மை என நம்பிய இளம்பெண் 3 தவணையாக ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் சொன்னபடி இளம்பெண்ணின் கணவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போதும் திருப்பிக் கொடுக்க வில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், தனது உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று இளம்பெண்ணின் தரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பணம் வாங்கி ஏமாற்றிய பெண்கள் வீடு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அங்கு 2 தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். பணம் வாங்கிய தாய்- 2 மகள்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
- 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.
கோவை:
தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் ரூ.127 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கோவை மண்டல மத்திய ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் குமார் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டு ஆறாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.எஸ.டி. அலுவலகத்தில் நேற்று சிறப்பு விழா நடந்தது. இதையொட்டி கோவை மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகத்தின் முதன்மை ஆணையர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வரி வருவாய் 2017-ம் ஆண்டு 7.19 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 18.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கோவை மண்டலத்தை பொறுத்தவரை 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு 67.83 லட்சமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டு 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.
கோவை மண்டலத்தில் 2017-ம் ஆண்டு 53,800-ஆக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 77,484-ஆக உயர்ந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
60 நாட்களுக்குள் 'ரீபண்ட்' வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இருப்பின் 30 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.
கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் 127 கோடி வரி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்து விட்டு வந்தனர்.
- கணவன் மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 54). இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (50).
இவர்கள் இருவரும் ஸ்மார்ட் வில்லேஜ் மேம்பாடு திட்டம் என்ற பெயரில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காவிடியில் ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கினர்.
வேலைவாய்ப்பு இல்லாத படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அதன் பின்னர் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பட்டதாரி வாலிபர்கள் இவர்கள் நிறுவனத்தை அணுகினர். அப்போது வேலைக்கு ஏற்றவாறு ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் போட்டி போட்டு பணத்தை செலுத்தினர். பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் வேலையும் கிடைக்கவில்லை பயிற்ச்சியும் அளிக்கவில்லை.
இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பிரசாத் நிறுவனத்தை அணுகி வேலை கொடுங்கள் அல்லது டெபாசிட் பணத்தை திருப்பி தர வேண்டுமென கூறினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீஸ் நிலையங்களில் பிரசாத் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தம்பதியினருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பிரசாந்த் தனது வீட்டை விற்பனை செய்து ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை திருப்பி கொடுத்தார்.
போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்து விட்டு வந்தனர்.
பிரசாந்த் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காததால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பி எம் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன கட்டுமான பணிக்காக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து காளிஸ்வரனிடம் கொடுத்ததாக தெரிகிறது.
- ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழ க்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ராஜபாளையம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ராஜபாளையத்தில் வாகன கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த கருத்த பாண்டியன் என்பவர் வாகன கட்டுமான பணிக்காக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து காளிஸ்வரனிடம் கொடுத்ததாக தெரி கிறது. ஆனால் காளீஸ்வரன் அந்த பணியை முடித்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக கேட்ட போது அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்த பாண்டி ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி மோசடி தொடர்பாக காளீஸ்வரன் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழ க்கு பதிவு செ ய்து விசாரித்து வருகிறார்.
- நகைகளை ஏலம் எடுத்து தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.12 ½ லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ரமேஷ், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டுள்ளார்.
விருதுநகர்
ஈரோடு மாவட்டம் எம்.அம்மன்பட்டி கோவில் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது41). விருதுநகர் ஆலங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் மனைவி பேச்சியம்மாள். இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்ப்பதாக ரமேஷிடம் பேச்சியம்மாள் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தங்களது வங்கியில் 380 கிராம் நகைகள் ஏலத்திற்கு வர உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து தரமுடியும் என்றும் ரமேஷிடம் பேச்சியம்மாள் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பிய ரமேஷ் விவரம் கேட்டுள்ளார். அப்போது ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்தால் 380 கிராம் நகைகளையும் ஏலத்தில் எடுத்து தருவதாக பேச்சியம்மாள் அவரிடம் உறுதி கொடுத்துள்ளார். இதனை நம்பிய அந்த வாலிபர் சிவகாசி பஸ் நிலையத்திற்கு நண்பர்க ளுடன் வந்துள்ளார்.
அதுகுறித்து பேச்சி யம்மாளுக்கு தகவல் கொடுத்தார். பேச்சி யம்மாளும் அங்கு சென்று அவரிடம் பேசியுள்ளார். பின்னர் பல்வேறு வங்கி கணக்கில் இருந்து பேச்சியம்மாளின் வங்கி கணக்கிற்கு ரூ.11 லட்சத்தை பரிமாற்றம் செய்தார்.
மேலும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கமாக கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட பேச்சி யம்மாள் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும் என்றும், செலுத்திவிட்டு நகைகளை பெற்று கொண்டு வருவதாகவும் அதுவரை பஸ் நிலையத்திலேயே காத்திருக்கும்படியும் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
சந்தேகமடைந்த ரமேஷ் அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் ரமேஷ் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டுள்ளார்.
உடனடியாக சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றிய பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.
- ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது.
- www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.
சென்னை:
ஏ.ஐ. என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
இதன் மூலமாக மனிதர்களை போன்று மாற்று உருவத்தை உருவாக்க முடியும் என்பதை பயன்படுத்தி போலியான நபர்களை உருவாக்கி திடுக்கிட வைக்கும் துணிகர மோசடி அரங்கேற தொடங்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது.
ஆரம்பத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களை காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப் போல சித்தரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், குற்றவாளிகள் இந்த சக்தியைப் தவறாகப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது அரங்கேற தொடங்கி உள்ளது.
மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல் ஒரு போலி கணக்கை உருவாக்குகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவரிடம் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர்.
ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது. வீடியோவை கையாளுதலுடன் கூடுதலாக, மோசடி செய்பவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல் தொகுப்பைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் குரலைப் பிரதிபலிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வீடியோ அழைப்பு மோசடிகளை எவ்வாறு தடுப்பது என சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் குமார் கூறியதாவது:-
தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் எனக் கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பைப் பெறும்போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும்.
ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்கள் தகவலுக்கான அணுகலைக் கட்டுப் படுத்த சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்யவும்.
அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, பல காரணி அங்கீகாரம் மற்றும் பிற அடையாளச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும்.
நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.
சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.
மோசடி நடந்த தளத்தை தொடர்பு கொண்டு மோசடி செய்தவரின் சுயவிவரத் தகவல் மற்றும் நீங்கள் சேகரித்த ஆதாரங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய விவரங்க ளையும் அவர்களிடம் வழங்கவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாகவும் அதன் காரணமாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சமூகவலைதளத்தில் நண்பராக பழகி கைவரிசை
- லண்டன் வாலிபர் கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை,
கோவை காளப்பட்டி அருகே உள்ள திருமுருகன் நகரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதா வது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கு கடந்த மார்ச் மாதம் பேஸ்புக் பக்கம் மூலமாக லண்டனை சேர்ந்த கிளிண்டன் என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் வாட்ஸ்அப் எண்ணை மாற்றிக் கொண்டு அதன் மூலம் பேசி வந்தோம். அவர் என்னிடம் லண்டனில் உள்ள பிரபல கார் நிறுவ னத்தில் விற்பனை மேலாள ராக வேலை பார்த்து வருவதாக கூறினார்.
மேலும் அவர் என்னிடம் கிறிஸ்துமல் பண்டிகை சுற்றுலாவில் இந்தியாவுக்கு வர உள்ளதாக கூறினார். கிளிண்டன் என்னிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் வைத்து இருப்பதாகவும், அதனை எனக்கு பார்சல் மூலமாக அனுப்புவதாகவும் கூறினார். பின்னர் என்னை தொடர்பு கொண்ட அவர் நகைகளை பார்சல் மூலமாக அனுப்பி விட்டதாகவும், டெல்லியில் விமான நிலையத்தில் உள்ள சுங்க த்துறை அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு வரியை செலுத்தி நகை களை பெற்றுக்கொள்ளு மாறு கூறினார். இதனை தொடர்ந்து என்னுடைய செல்போன் எண்ணுக்கு டெல்லி விமான நிலை யத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் பேசினார். அவர் என்னிடம் பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு வரியாக ரூ.32 ஆயிரத்தை அவர் கூறி வங்கி கண க்கிற்கு அனுப்பி வைக்கு ம்படி கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் பணத்தை அவர் கூறி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் பணம் வரவி ல்லை என்று கூறி விட்டனர்.
அவர்கள் என்னிடம் நகைகள் இருப்பதாக தொடர்ந்து ஆசை வார்த்தை கூறினர்.
இதனையடுத்து நகைகளை பெற்றுக்கொ ண்டால் போதும் என்ற நோக்கில் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு வெவ்வேறு பரிவர்த்த னைகளில் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத் தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு நகைகள் வந்து சேரவில்லை.
அவர்களது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் இவர்கள் மோசடி நபர்கள் என்பது எனக்கு தெரிய வந்தது.
எனவே என்னிடம் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி நகைகள் பார்சல் அனுப்பி வைத்துள்ளதாக நம்ப வைத்து ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி தனியார் பள்ளி ஆசிரி யையிடம் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.