search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Centernary"

    • குளத்தூர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
    • இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆவலுடன் விழாவில் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு அனைவரிடமும் மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 100 ஆண்டுகள் கடந்த தங்களது பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக திட்டமிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.

    ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியின் கட்டிட மற்றும் அடிப்படை வசதிகளின் நிலையைக் கண்டு பள்ளியின் அடிப்படையை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    இதுவரை இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாண வர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அனைவரும் ஒன்றினைந்து தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை வழங்கி தற்போது இப்பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டி டங்கள் சீரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கலையின்றி காணப்பட்ட பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து கலர்புல்லாக மாற்றியுள்ளனர்.

    அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் பிரம்மா ண்டமாக உருவாக்கி நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடி அனை வருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.

    பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

    நூற்றாண்டு விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்று பேசினார். பின்னர் குளத்தூர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பால் மாற்றப்பட்ட பள்ளி கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து பல ஆண்டு களுக்குப்பின் சந்தித்த தங்களது பள்ளிப்பருவ நண்பர்களிடம் மனமகிழ்ச்சியோடு தங்களது பழைய பள்ளி அனுபவங்களை பேசி, குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினர். இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உட்பட பல நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வரும் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆவலுடன் விழாவில் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு அனைவரிடமும் மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விழாவின் தொடர்ச்சி யாக பள்ளியில் பரத நாட்டியம், கர காட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், காவடி யாட்டம் என பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் தொடங்கி ட்ரெண்ட்டிங் டான்ஸ் வரை அனைத்தையும் ஆடி அங்கிருந்த ஒட்டுமொத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களையும் கண்ணிமைக்காமல் கண்டு ரசிக்க வைத்தனர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விழாவில் 1970-ம் ஆண்டு முதல் தற்போது பயின்று வரும் மாணவர்கள் வரை என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ×