search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school correspondent"

    காஞ்சீபுரம் அருகே போலி கையெழுத்து போட்டு சொத்து அபகரித்தது குறித்து பள்ளி தாளாளர் மீது முதல் அவரது முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலை தனியார் பள்ளியில் தாளாளராக இருப்பவர் அருண்குமார்.

    இவருக்கும் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை தேன்மொழிக்கும் கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது மகன் கவுதம் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தாய் தேன்மொழியுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் தேன்மொழி தனது மகன் கவுதமுடன் வந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிடம் புகார் மனு கொடுத்தார்.

    அதில் தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி முன்னாள் கணவர் அருண்குமார் சொத்தை அபகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 1992-ம் ஆண்டு ஓரிக்கை பகுதியில் 809 சதுரடி கொண்ட காலி மனையை சொந்த பணத்தில் வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்பு அந்த இடம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பத்திரதுறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு ஆவணங்களை பெற்று பார்த்த போது 2004-ம் ஆண்டு முன்ளாள் கணவரான பள்ளி தாளாளர் அருண்குமார் மற்றும் அவருடைய தாயார் மனோகரி இருவரும் சேர்ந்து எனது கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடாக விற்று இருப்பது தெரியவந்தது.

    எனக்கு சொந்தமான காலிமனையை சட்டவிரோதமாக மோசடியாக அபகரித்த பள்ளி தாளாளர் அருண்குமார் உள்ளிட்ட நபர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews
    ×