search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scooters"

    • ராஜஸ்தானில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஏழை மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.

    ராஜஸ்தான் அரசின் முதன்மைத் திட்டமாக இது கருதப்படுகிறது. சுமார் 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் மூலம் 12 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்பங்களில் இருந்து 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    இந்தத் திட்டத்தில் தேர்வு பெற, மாணவிகள் மாநில வாரியத் தேர்வுகளில் 65 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும், 10 அல்லது 12 ஆம் வகுப்புகளில் சிபிஎஸ்இ தேர்வுகளில் 75 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் வாங்கப்பட்டு வந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் தெற்கு ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் உள்ள வித்யாமந்திர் கல்லூரி மற்றும் ஹர்தேவ் ஜோஷி அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவை மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படாமல், வெயிலில் காய்ந்தும், புற்கள் மண்டியும் உள்ளதால் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்கூட்டர்களை விரைவில் தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் ஆகியவற்றால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 57 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அமைச்சர்கள் வழங்கினர்.
    • முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 59 ஆயிரத்து 500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினர். பின்னர் அமைச்சர்கள் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களது முன்னேற் றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி மாற்றுத்தி றனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை, ெரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×