என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Scorching heat"
- மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் போது அனல் காற்றுடன் தூசி பறக்கிறது.
- இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் - விழுப்புரம் 4 வழி சாலையில் எம்.என். குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 17 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டு வருகின்றது. இந்த புதிய சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் போது அனல் காற்றுடன் தூசி பறக்கிறது.
சாலை கட்டமைப்பு மேம்படு த்தப்பட்டு வரும் நிலையில், சாலையின் 2 புறமும் மரங்கள் இல்லாததால், அனல் வீசும் சாலையாக மாறி வருகின்றது.
இதனால் அவ்வழியாக பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தி ற்கு உள்ளாகிவருகின்றனர். கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதி, திருவண்டார் கோவில் பஸ் நிறுத்த பகுதி, திருபுவனை 4 முனை சந்திப்பு, மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பு பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் ஒரு வழி பாதையில் செல்கிறது.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைக்காக ஏற்படுத்தப்படும் திடீர் பள்ளங்களால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மரண பயத்தில் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
- வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது.
- இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர்.
காங்கயம் :
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. மாவட்டத்தின் கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் அதிக அளவு ஏற்பட்டு உள்ளது. இதன்படி காலை 7 மணிக்கு மிதமான வெயில் அடிக்க தொடங்கி மதியம் 12 மணிக்கு மேல் வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது. பின்னர் இரவு நேரங்களிலும் வெயிலின் உக்கிர தாக்கத்தினால் வெப்பத்துடன் கூடிய சூடான அனல் காற்று வீசி வருகிறது. இதனால் நகர, கிராம பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ, மாணவிகள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர். வெயிலின் உக்கிர தாக்கத்தை குறைக்கும் விதமாக இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் இனிப்பு வகை பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நகர, சுற்றுப்புற கிராம பகுதிகளில் பல்வேறு வீடுகளில் மின் விசிறிகள், ஏ.சி எந்திரங்கள் பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதனால் மின் தேவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
கோடை முடிந்தும் இளநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுபற்றி இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:- பொதுவாக ஆண்டு முழுவதும் இளநீர் விற்பனை இருந்து கொண்டே இருக்கும். இதில் கோடை காலத்தில் இளநீர் விற்பனை நன்கு சூடு பிடித்து விறுவிறுப்பாக விற்பனையாகும். இதன்படி சுட்டெரிக்கும் கோடை வெயில் காலகட்டத்தில் ஒரு இளநீரின் விலை ரூ.40 முதல் ரூ.60 வரை என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படும். இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் தொடங்கி அதிக அளவில் வெப்பம் வெளியேறி வருகிறது. இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பே இளநீர் விற்பனை விறுவிறுப்பு அடைந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் உள்ளதால் இளநீர் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சாதாரண இளநீர் ஒன்று ரூ.30-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. அவ்வாறு பாதிக்கப்படும் கால்நடைகளை எப்படி கண்டறிவது,எவ்வாறு பாதுகாக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சுத்தமான குளிர்ந்த நீர் குடிக்க கொடுக்க வேண்டும். கால்நடை கொட்டகைகளில் உப்புக் கட்டிகளை கட்டி தொங்க விட வேண்டும். அதன் வாயிலாக கால்நடைகளில் தண்ணீர் பருகும் தன்மை அதிகரித்து, உப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். மாட்டுக்கொட்டையில் கூரைக்கு மேலே நீர் தெளிப்பான் அமைக்கலாம். கால்நடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை, 3மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.கோடைக்காலங்களில் கால்நடைகளின் தீவன தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.பருவ காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும் போது, அவற்றினை ஊறுகாய் தீவனமாக மாற்றி சேமித்து வைத்து கோடையில் உணவாக தரலாம்.
பொதுவாக கொடிக்காய்புளி, வாகை, வேம்பு, கருவேல், சுபாபுல், மா, பலா, ஆல், அகத்தி, அரசு போன்ற மரங்களின் இலைகளை ஆடுகளுக்கு சிறந்த உணவாகும். கிராமங்களில் அதிகமாக கோடையில் கிடைக்கும் செவ்வேல் மற்றும் கருவேல் உலர் காய்கள் ஆடுகளுக்கு சிறந்த புரதச் சத்து மிக்க உணவாகும். இவ்வாறு அவர் கூறினார். ஒரு ஆடு 8 முதல் 12 லிட்டர் அளவுக்கு தினமும் நீர் அருந்தும். அதிக வெப்பநிலை நிலவுவதால் மேய்ச்சல் பகுதியில் நல்ல சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது. இரவிலும், விடியல் காலையிலும், வெயில் குறைந்த நேரங்களில் அதிக தீவனம் எடுக்கும். கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமான இடவசதி அளிக்க வேண்டும்.
கோழிகளுக்கு குடிநீரில் வைட்டமின், 'சி' மருந்தினை, கோழி ஒன்றுக்கு தலா 10 மி.லி., கிராம் வீதம் கலந்து கொடுத்தால் அயற்சி ஓரளவு குறையும். மேலும் அயற்சி நீக்கும் பி காம்பளக்ஸ் வைட்டமின், குளுக்கோஸ் போன்றவை கலந்து கொடுக்கலாம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்