என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sea wave"
- கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு மீனவர்கள் திரும்பி பார்த்தனர்.
- பலத்த போராட்டத்திற்கு பிறகு 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பொட்டல்குழி பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி (வயது 48). இவரது மனைவி சீமா (47).
இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் விஜயா (45). இவரது மகள்கள் ஆஷா (22), ஆஷிகா (17). இவர்கள் அனைவருக்கும் குடும்ப கோவில் ஒன்று உள்ளது. அங்கு நடைபெறும் திருவிழாவுக்கு மண்டைக்காடு கடலில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்வது வழக்கம்.
தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருவதால், இன்று காலை வைகுண்டமணி அவரது மனைவி மற்றும் விஜயா குடும்பத்தினர் புனித நீர் எடுப்பதற்காக மண்டைக் காடு சென்றனர். அவர்கள் முதலில் கடலில் இறங்கி கால் நனைத்தனர்.
அப்போது ராட்சத அலை எழுந்து வந்தது. இதனை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் கடல் அலை வாரி இழுத்துச்சென்றது.
வைகுண்டமணி, அவரது மனைவி சீமா, விஜயா, அவரது மகள்கள் ஆஷா மற்றும் ஆஷிகா ஆகியோர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டபடியே தண்ணீரில் மூழ்கினர். அப்போது காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.
அவர்கள், கடலில் தத்தளித்தவர்களின் அபாய குரலை கேட்டு திரும்பி பார்த்தனர். உடனடியாக கடலில் குதித்து 5 பேரையும் காப்பாற்ற முயன்றனர். பலத்த போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் 5 பேரும் அதற்குள் மயங்கிவிட்டனர். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும், குளச்சல் கடலோர போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். உடனடியாக மயக்கத்தில் இருந்த 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.
சரியான நேரத்தில் 5 பேரையும் கடலில் குதித்து காப்பாற்றிய மீனவர்களை பலரும் பாராட்டினர். மீனவர்கள் கவனிக்காமல் இருந்திருந்தால் கடல் அலையில் 5 பேரும் மூழ்கி பலியாகி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.
- சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை.
புதுச்சேரி:
காரைக்கால் கடலில் நேற்று குளித்த திருவாரூர் மருத்து வக்கல்லூரி மாண வர்களில், 4 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர், இதில் 3 பேர் மீட்கபப்ட்ட நிலையில், ஒருவர் மாயமாகி யுள்ளார். அவரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிர மாக தேடிவருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வரும், சிவக்குமார் (வயது 20), கரோனா (20), அகிலாண்டேஸ்வரி (19), கனகலட்சுமி (19) உள்ளிட்ட 15 மாணவ-மாணவிகள் காரைக்காலுக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்களில், சிவக்குமார், கரோனா, அகிலாண்டேஸ் வரி, கனகலட்சுமி உள்ளிட்ட 4 பேர், மாவட்ட நிர்வாக த்தின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் வந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவ ர்களின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் சிலர் மாணவர்க ளின் உதவியுடன் உயிருக்கு போராடிய 3 மாணவிகளை மட்டும் மீட்டனர்.சிவக்குமார் கடலின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்ட தால், அவர்க ளால் மீட்டக் முடியவில்லை. தொடர்ந்து, காரைக்கால் நகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் நிலையத்திற்கு மாண வர்கள் தகவல் அளித்த னர். அதன்பேரில், கடலில் மாயமான பட்டு கோட்டை யைச்சேர்ந்த மாணவர் சிவக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். காப்பாற்றப்பட்ட 3 மாணவி கள், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை கக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து, காரைக் கால் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டும், அப்பகுதியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையில் ஈடுபட்டாமல் இருந்ததாக கூறப்படு கிறது.கடலில் குளிக்க வேன்டாம் என மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் எச்சரிக்கை போர்டு வைத்திருந்தாலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் நேரத்தில், போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வல ர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 38). மீனவர்.
அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், சுப்பிரமணி, மண்ணாங்கட்டி ஆகியோர் ஒரு பைபர் படகில் கடந்த 6-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துவிட்டு மறுநாள் காலை அவர்கள் கரைதிரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் அதிகம் காணப்பட்டது. இதில் படகில் இருந்து மண்ணாங்கட்டி தடுமாறி கடலில் விழுந்தார்.
கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மண்ணாங் கட்டியை மீட்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து மதிவாணன், சுப்பிரமணியன் ஆகியோரை கரை திரும்பினர். பின்பு அவர்கள் மரக்காணம் போலீசில் புகார் செய்தனர். புகாரில் கடல் அலையில் மண்ணாங்கட்டி சிக்கிவிட்டார். அவரை மீட்கவேண்டும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மீனவர்கள் மண்ணாங்கட்டியை தேடி சென்றனர். அப்போது கோமுட்டி சாவடி கடற்கரையில் மண்ணாங்கட்டி பிணமாக கிடந்தார். பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடல் அலையில் சிக்கி இறந்த மீனவர் மண்ணாங்கட்டிக்கு சரவணன் என்ற மகனும், லாவன்யா, நிவேதா ஆகிய மகள்களும் உள்ளனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிங்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அபு (வயது 14). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜாவித் (18). இவர் தனியார் பள்ளி வேனில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
நேற்று மாலை அபு, ஜாவித் மற்றும் அவர்களது நண்பர்கள் இப்ரான் உள்பட 6 பேர் மரக்காணம் அடுத்த தீர்த்தவாரி கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் அபு மற்றும் ஜாவித் சிக்கினர். அலையானது அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. அவர்கள் கடலில் மூழ்கினார்கள். இதை பார்த்த அவர்களது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அபு மற்றும் ஜாவித்தை கடலில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்த பகுதி மீனவர்களுடன் இணைந்து மாயமான அபு மற்றும் ஜாவித்தை நீண்ட நேரம் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் வந்ததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை குப்பம் கடற்கரையில் மாணவன் அபுவின் உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கடல் அலையில் சிக்கி மாயமான மற்றொரு வாலிபர் ஜாவித்தை இன்று 2-வது நாளாக கடலோர காவல் படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்