search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "second unit"

    கூடங்குளத்தில் 2-வது அணு உலை இன்று அதிகாலை 2.37 மணிக்கு மீண்டும் இயங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. #KudankulamNuclearPowerPlant
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக முதலாவது அணு உலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    2-வது அணு உலையில் மட்டும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் 2-வது அணு உலையிலும் மின் உற்பத்தி முழுமையாக நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி வால்வு கோளாறு காரணமாக 2-வது அணு உலையில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதனால் கூடங்குளம் அணு மின்சாரம் தமிழகத்துக்கு முற்றிலும் கிடைக்காமல் போனது. இதன் காரணமாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் 2-வது அணு உலையை விரைவில் சீரமைத்து மின் உற்பத்தி தொடங்க அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.37 மணிக்கு 2-வது அணு உலை மீண்டும் இயங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று மாலை இது 450 மெகாவாட்டாக உயர்த்தப்படும். அதன் பிறகு படிப்படியாக 2 நாளில் மீண்டும் 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக மின் தொகுப்புக்கு அனுப்பப்படும். இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது.  #KudankulamNuclearPowerPlant
    ×