search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seed Proof"

    • அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார்.
    • தற்போது பவானி அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து வம்பன் 8 ஆதாரநிலை விதையின் சுத்திப்பணி நடைபெற்று வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குரும்பநாய்க்கன்பாளையத்தில் அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இவ்விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் அமைக்க ப்படும் விதைப்ப ண்ணைகள் விதைச்சான்று அலுவலரின் ஆய்வின் போது பயிர் விலகுதூரம் பிற ரக கலவன்கள், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் முதலிய வயல் தரங்களில் தேர்ச்சி பெற்றவுடன் அறுவடை செய்யப்படும்.

    பின்பு விதைக்கு வியல்கள் முத்திரை யிடப்பட்டு இவ்விதை சுத்தி நிலை–யத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்தி செய்யப்படும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட விதைக்குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு, விதை பகுப்பாய்விற்காக விதை ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

    இங்கு முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலவன் விதைகள் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவுடன் சான்றட்டை பொருத்த ப்பட்டு விவசா யிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்ப––டும்.

    தற்போது பவானி அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து வம்பன் 8 ஆதாரநிலை விதையின் சுத்திப்பணி நடைபெற்று வருகிறது.

    இவ்விதை விரைவில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயி களுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது பவானி விதைச்சான்று அலுவலர் நாசர்அலி, வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் உதவி பொறியாளர் கவுதம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×