search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seer"

    • துவாக்குடி அருகே வடக்குமலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர்கள் கல்வி சீர் வழங்கினர்
    • மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்

    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலை–யில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆண்டு–தோறும் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடை–பெறும். பள்ளிக்கும், மாண–வர்களுக்கும் கல்வி கற்க தேவையான பொருட்களை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்க–ளும், தன்னார்வலர்களும் வழங்குவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால், கல்வி சீர் வழங்கும் நிகழ்வு நடைபெறவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு கல்வி சீர் எடுக்கும் விழாவானது நடைபெற்றது. விழாவை வட்டார கல்வி அலுவலர்கள் ரெஜி –பெஞ்சமின், ஜெஹ்ரா பர்வீன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த–னர். இதில் பெற்றோர்கள் பள்ளி சீர்வரிசை பொருட்களை தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முழுங்க ஆட்டம், பாட்டத்துடன் வீதி, வீதியாக ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் கல்வி குறித்த விழிப்புணர்வு பாடல்களை பாடினார். அப்போது பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவி–னர், எழுத்தறிவு திட்டத்தில் பயிற்சி பெறுப–வர்கள் தலைமை ஆசிரியரின் பாடலுக்கு கும்மி அடித்து ஆடினர். மேலும் பள்ளி மாணவன் சிலம்பாட்டம் ஆடி சீர்வ–ரிசை கொண்டு வந்த பெற்றோர்களை வரவேற்று உற்சாகப்படுத்தினார். ஊர்வலமாக பள்ளியை வந்தடைந்தும் சீர்வரிசை கொண்டு வந்த நபர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


    ×