என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seized"

    • சப் -இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மது பாட்டில்கள் கடத்திய சண்முகராஜ், சவுந்தர பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவிலை அடுத்த அய்யாபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்களை சோதனை செய்ததில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 100 மது பாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து களப்பாக்குளத்தை சேர்ந்த சண்முகராஜ் (வயது 29), சவுந்தர பாண்டியன் (35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்ததை ஒருவர் சமூக வலைதளத்தில் பரப்பினார்.
    • போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் புதிய பஸ் நிலையம் முன்பு டூரிஸ்ட் வேன் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்தது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினார். இது சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த சூலூர் போலீசார் புதிய பஸ்நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

    பின்னர் ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 வேன்களும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. டூரிஸ்ட் வாகனங்களை வைத்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு கான்டிராக்ட் முறையில் இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர் விசாரணையில் அவரிடம் உள்ள வாகனங்களுக்கு ஆர்.சி.புத்தகம் மட்டுமே இருப்பதாகவும், குறிப்பிட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிந்துரை செய்த சூலூர் போலீசார் மேல்நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வேறு யாராவது ஒரே பதிவெண்ணில் பல வாகனங்களை இயக்குகிறார்களா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் வாகன சோதனையில் 2 துப்பாக்கிகள்-பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறவைகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-கால்பிரவு 4 வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கி டமான மினி சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த வாக னத்தில் இருந்து 5 பேர் இறங்கினர். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிமம் இல்லாத 2 ஒற்றைக் குழல் துப்பாக்கி கள், 50 கிராம் பால்ரஸ் குண்டுகள், 50 கிராம் ரவை தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

    வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மோகன்ராஜ், ரவிக்குமார், நடராஜன், அஜித் குமார், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தினர் .

    விவசாய நிலங்களை அழிக்கும் விலங்கு கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறந்தாங்கி மார்க்கெட்டில் முத்திரையிடா 21 மின்னனு தராசுகள் பறிமுதல் செய்தனர்
    • தொழிலாளர்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தினசரி சந்தையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை முறையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. காய்கறிகளை எடை அளவீடு செய்வதற்கு எடைக்கற்கள், தராசு மற்றும் மின்னனு தராசுகள் பயன்படுதப்படுகின்றன.எடை போடும் தராசுகள் போலியானதோ, தேய்மானம் ஏற்பட்டோ, எடைகற்கள் உடைந்தோ காணப்பட்டால் நுகர்வோர் பாதிக்கக் கூடும் என்பதற்காக தொழிலாளர் துறை சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை எடை தராசுகள் சரிபார்க்கப்பட்டு முத்திரை பதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தினசரி காய்கறி சந்தை மற்றும் தினசரி மீன் சந்தை ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முத்திரையிடப்படாத 21 மின்னனு தராசுகள் மற்றும் எடை கற்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடை கற்கள் அறந்தாங்கி தொழிலாளர் துறை அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சோதனையில் மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர்கள் குணசீலன், லெட்சுமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
    • லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

    சூலூர்,

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான லாரியில் காவல் கிணறு பகுதியில் இருந்து கோவைக்கு செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டத்தை சேர்ந்த பிஜு (47) என்பவர் ஓட்டி வந்தார். சூலூர் அருகே லாரி வந்தபோது சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் ஓட்டுநர் லாரியில் இருந்து தப்பி ஓடினார். லாரியின் பாரத்தை பரிசோதித்த போது லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 18 டன் அளவு அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனே லாரியை சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். மேலும் லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.  

    • விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    • 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் சார்பில் சட்டவிரோதமாக மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 2583 மது பாட்டில்களை மாநகர மதுவிலக்கு போலீசார் கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் பழங்கள் பெரும்பாலும் செயற்கை முறையில் ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகின்றன.

    இதனால் அதை உண்ணும் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு ரசாயனங்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, அவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் நேற்று கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள பழகடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது 2 கடைகளில் அழுகிய பழங்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதே போல மற்ற 2 பழக்கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த 4½ கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் தெரிவிக்கை யில், தர்ப்பூசணி, மாம்பழம், வாழைபழம் போன்ற பழங்களை இரசாயன பொ ருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால், அவை பறிமுதல் செய்யப் படுவதுடன் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, வெலிங்டன் இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி மற்றும் போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.அவற்றை கடத்தி வந்த வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி (45), அப்துல் மஜீத் (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் இவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா வாங்கி வந்து குன்னூரில் விற்பனை செய்ய திட்டமிருந்தது தெரியவந்தது.

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உரிமையாளர்-டிரைவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழி யாக வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை காண் பித்தனர்.

    டிராக்டரை ஓட்டி வந்த நபர், போலீசாரை பார்த்த தும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அதில் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். டிராக்டரை ஓட்டி வந்த மாரியப்பன் மற்றும் உரிமை யாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    • திருச்செந்தூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குறித்து நல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்லபாண்டியன் மேற்பார்வையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்து வோர்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவினர் திருச்செந்தூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட சுமார் 75 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்து, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குறித்து நல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்யப்பட்டன.
    • பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

    அவிநாசி:

    அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கா், ஆட்டையாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பள்ளி குழந்தைகளை அழைத்து கொண்டு அவ்வழியாக வந்த தெக்கலூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்தாா்.

    அப்போது, பள்ளி வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வாகனத்தில் கேமரா பொருத்தப்படாமலும், பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. 

    • மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு வந்நதது.
    • திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதியில் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் வடக்கு காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் என்பதும் இவர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை எஸ் .பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .

    அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் .மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இன்னும் பல இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

    தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிய விக்கி என்கின்ற விக்னேஸ்வரனை வடக்கு காவல் துறையினர் கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×