search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selfie Point"

    • “நம்ம சிங்கம்புணரி” செல்பி பாயிண்ட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார்.
    • இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் ஆனி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல்நாளான இன்று கொடியேற்றம் காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்து ஒரே நேரத்தில் தேங்காய் உடைப்பார்கள்.

    இந்த திருவிழாவையொட்டி மாவட்டத்திலேயே முதன்முறையாக சிங்கம்புணரி மணியம்மாள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாட்டில் "இது நம்ம சிங்கம்புணரி" என்ற பெயரில் அலங்கார விளக்குகளுடன் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

    • மதுரை ெரயில் நிலையத்தில் சுதந்திர தின செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உற்சாகம் கண்டுகளித்தனர்.
    • நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களிலும் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்தில் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதை வலியுறுத்தி "செல்பி பாயிண்ட்" அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.

    மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களிலும் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பொதுமக்கள் குடும்பத்துடன் ரெயிலின் மேற்கூரை, பெட்டிகளின் இணைப்பு பகுதிகளில் சிரமப்பட்டு பயணம் செய்த துயர சம்பவங்களின் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இதுவும் பார்வையாளர்களை கவர்ந்தது.

    புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பேரையூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அழகம் பெருமாள் (வயது 98) பேசுகையில், "எனக்கு அப்போது 18 வயது. மதுரை ரெயில் நிலையம் எதிரே கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டேன். இதற்காக எனக்கு ஆங்கிலேய அரசு, 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. கர்நாடக மாநிலம் அலிபுரம் சிறையில் அவதிப்பட்டேன். மதுரை ரெயில் நிலைய 75-வது சுதந்திர அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில், 80 ஆண்டு–களுக்கு பிறகு மீண்டும் கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

    நிகழ்ச்சியில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், உதவி அதிகாரி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே திருவனந்தபுரம் கோட்ட சாரண- சாரணியரின் வாகன பேரணி மதுரை வந்தது. மதுரை கோட்டம் சார்பில் ரெயில்வே மேலாளர் பத்மநாதன் அனந்த் கொடியை பெற்றுக் கொண்டார்.

    மதுரை கோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் வாகன பேரணி திருச்சிக்குப் புறப்பட்டு சென்றது. மதுரை ரெயில் நிலையத்தில் சுதந்திர தின அமுதப் பெருவிழா வினாடி- வினா போட்டி, ஆட்சி மொழி அதிகாரி சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் வர்த்தக பிரிவு ஊழியர்கள் கிருஷ்ணன், முருகப் பொற்பாண்டியன், நிதி பிரிவு அமுதா ஆகியோரின் அணி முதல் பரிசு பெற்றது.

    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • மாநகராட்சி அலுவலர்கள், லோகோ முன்பாக நின்று போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

    திருப்பூர்:

    உலக செஸ் ஒலிம்பியாட் -2022 போட்டி 28 ந் தேதி துவங்கி, ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியா செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. மனு கொடுக்க வந்த இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், செல்பி ஸ்பாட்டில் நின்று செல்பி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து மகிழ்ந்தனர்.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அலுவலகம் முன் பெரிய அளவிலான 'லோகோ' வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், லோகோ முன்பாக நின்று போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

    ×