என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sengundram"
செங்குன்றம்:
வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (24). தனியார் குடோன் சூப்பர்வைசர்.
இன்று காலை 10 மணி அளவில் சதீஷ் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்தார். செங்குன்றம் ஆலமரம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கீழே விழுந்த சதீஷ் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
விபத்துக்கு காரணமான லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.
தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
போரூர்:
நெற்குன்றம் வரலட்சுமி நகரில் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருபவர் ராஜேஷ் கண்ணா.
கடந்த மாதம் அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்த சொகுசு வேன் திருட்டு போனது.இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நெற்குன்றத்தில் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கினர்.
அவர்கள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பதும் கடந்த மாதம் ராஜேஷ் கண்ணாவின் டெம்போ டிராவலர் வாகனத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி 2 டெம்போ, டிராவலர், சொகுசு வேன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வாகனத்தை திருடி நம்பர் பிளேட்டை மாற்றி வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
செங்குன்றம் பம்மதுகுளம் அருகே செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடு ஒன்றுடன் செங்குன்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த டில்லிபாபு, சூர்யா என்பதும் இவர்கள் 2 பேரும் ஆடு திருடர்கள் என்பதும் தெரியவந்தது. செங்குன்றம் போலீசார் அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
இதுவரை இவர்கள் செங்குன்றம் மற்றும் செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாதவரம்:
ஆந்திராவில் இருந்து செங்குன்றம் வழியாக சென்னைக்கு வாகனங்களில் குட்கா புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட போலீசார் இன்று காலை செங்குன்றம், ஜி.என்.டி. சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ்சில் திடீர் சோதனை நடத்தினர்.
பஸ்சில் இருந்த விஜயவாடா, பாவக்காபுரம் பகுதியை சேர்ந்த துர்க்கா ராவ் என்பவரது பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டு, கட்டாக பணம் இருந்தது.மொத்தம் ரூ. 1 கோடியே 5 லட்சம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான ஆவணம் துர்க்கா ராவிடம் இல்லை.
இதையடுத்து ரூ. 1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை செங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக துர்க்கா ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், தான் நகை வியாபாரி என்றும், சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லாததால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட பணம் யாருடையது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திரா பஸ்சில் ரூ. 1 கோடியே 5 லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரம்:
மாதவரத்தை அடுத்த கொசப்பூரை சேர்ந்தவர் அருள் (52). கூலி தொழிலாளி. இவர் செங்குன்றம் அருகேயுள்ள கண்ணம பாளையத்தில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர் பிரபாகரன் (24), மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் கார்த்திக் செல்வம் (23) ஆகியோர் ஓட்டி வந்த ‘மொபட்’ அவரது சைக்கிள் மீது மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்ட அருள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பயிற்சி டாக்டர் பிரபாகரன், மாணவர் கார்த்திக் செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் ஆந்திர மாநிலம் தடாவுக்கு சென்ற போது விபத்து நடந்தது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்